November 3, 2026

பழனி பள்ளியில் உணவுத் திருவிழா

 பழனி நவம்பர்

பழனி அடிவாரம் திருவள்ளுவர் நடுநிலைப் பள்ளியில் 75ஆவது ஆண்டு விழா துவக்கத்தையொட்டி உணவுத் திருவிழா நடைபெற்றது. இதை வட்டார கல்வி அலுவலர் ஜெயராணி தொடங்கி வைத்தார். இதில் சரவண பொய்கை கந்த விலாஸ் அதிபர் என் பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாணவ மாணவிகள் செய்த உணவுகளை பார்வையிட்டு, பரிசுகள் வழங்கினார். இதில் தலைமை ஆசிரியர் எம் பிரபாகரன், எஸ் ஆலன் சச்சின் குமார் ஆசிரியர்கள் ஜே.பாரதி டி.ஏசுபாதம் எழில் வதனன்  எஸ் ஆனந்தன் தாமரை நற்பணி மன்றம் ஆர் பழனிமுருகன் ஆகியோர் பங்கேற்றனர். உணவுத் திருவிழாவில் பள்ளி மாணவ மாணவியர்கள் தாங்கள் கைப்பட செய்த உணவுகளை கொண்டு வந்து பங்கேற்றனர்.

Spread the love