பழனி ஜூன் 09
பழனி முருகன் மலைக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீரென்று நேற்று ஆய்வு செய்தார். தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று பழனி முருகன் கோயிலுக்கு வருகை புரிந்தார். பின்பு அவர் பழனி டு கொடைக்கானல் சாலையில் புதிதாக ரூபாய் 53 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அலங்கார நுழைவு வாயிலை திறந்து வைத்தார். பின்பு ஐந்தரை லட்சத்தில் புனரமைக்கப்பட்ட நந்தவனம் பூங்காவை திறந்து வைத்தார். அதன் பின்பு அவர் மேல்நிலை ரயில் நிலையம், பக்தர்கள் காத்திருக்கும் அரை, தங்கும்விடுதி, பஞ்சாமிர்த உற்பத்தி கூடம், ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். பின்பு ரோப் காரில் மலைக்கோயில் சென்ற அவரை விஐபி தரிசனத்தில் செல்லாமல் பொது தரிசன வழியாக பக்தருடன் நின்றபடி க்யூ வரிசையில் சென்றார். பக்தர்களிடம் குறைகளை பற்றி விசாரித்தார். பின்பு அன்னதானம் வழங்கும் இடத்துக்கு சென்று அன்னதானம் சாப்பிட்டார் மேலும் அவர் ஆய்வு செய்த பொழுது ஒரு குடிநீர் குழாயில் குடிநீர் வரவில்லை, மேலும் டம்ளர் மிகவும் அசுத்தமாக இருந்தது மேலும் பக்தர்கள் காத்திருக்கும் பகுதியில் ஒரு நாய் படுத்து கிடந்தது அவற்றை அதிகாரியிடம் சுட்டிக்காட்டினர். இதற்கான நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் குமரகுருபரன், ஆணையர் வினைய், சட்டமன்ற உறுப்பினர் ரவி மனோகரன், துணை ஆணையர் வெங்கடேசன், தமிழக வெற்றி கழகம் மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன், இணைச் செயலாளர் சிவா, மூத்த நிர்வாகி மகுடீஸ்வரன், பழனி சட்டமன்ற தொகுதி நிர்வாகி டாக்டர் பிரவீன் குமார், செயற்குழு உறுப்பினர் பழனிபாலன், நகர செயலாளர் மிதுன் மனோகரன், நிர்வாகிகள் ஜே பி எஸ் சஞ்சய்மணி, முருகன் இக்பால் அதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர் தீன், பாலசமுத்திரம் பேரூர் செயலாளர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் கே எம் சுப்பிரமணியன், அலங்கவர் தனசேகர், பாலசுப்பிரமணி, அன்னபூரணி, பாலசுப்ரமணியம், அதிமுக நிர்வாகிகள் டி முத்துசாமி ஆர் எம் டி சி மாரியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்

More Stories
ரெட்டியார்சத்திரத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கணவன் – மனைவி உட்பட 3 பேர் கைது, 56 கிலோ கஞ்சா பறிமுதல் – எஸ்.பி. அதிரடி நடவடிக்கை
ராமநாதபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் – பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய கோரிக்கை
சாயல்குடி ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு புகார் – மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு செய்ய கோரிக்கை