October 30, 2026

பாக். துறைமுகத்தில் 7 மாதமாக சிக்கி தவிக்கும் 6 இந்தியர்கள்: மீட்கக் கோரி மத்திய அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை

புதுடெல்லி: பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்​தில் இந்திய மாலுமிகள் 6 பேர் கடந்த 7 மாதங்​களாக சிக்கி தவித்து வருகின்றனர். அவர்​களை பத்​திர​மாக மீட்​கக்​கோரி மத்​திய அரசுக்கு அவர்​களின் குடும்​பத்​தினர் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

ஈரானை தளமாகக் கொண்ட கெவர் ஷிப்​பிங் நிறு​வனத்​தின் கப்பல் ஒன்று கடந்த ஏப்​ரல் மாதம் 17-ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்​துக்கு சென்​றது. கப்​பல் நிறு​வனத்​துக்​கும் துறைமுக அதி​காரி​களுக்​கும் இடையே ஏற்​பட்ட தக​ராறைத் தொடர்ந்து கப்​பல் தடுத்து வைக்​கப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. அந்த கப்​பலில் இந்​திய மாலுமிகள் 6 பேர் இருப்​ப​தாகவும், கடந்த 7 மாதங்​களாக அங்கு அவர்​கள் தவித்து வரு​வ​தாகவும் தற்​போது தகவல் வெளியாகி உள்​ளது.

மாலுமிகளின் பாஸ்​போர்ட்​டுகள் பறி​முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கப்​பலுக்​கான மின்​சார விநியோகம் துண்​டிக்​கப்​பட்​டுள்​ள​தால் அவர்​களு​டனான தொடர்பு கடுமையாகக் கட்​டுப்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாகவும் அவர்​களது குடும்பத்​தினர் குற்​றம் சாட்​டியுள்​ளனர். கராச்சி துறைமுகத்​தில் சிக்கி தவிக்​கும் இந்​திய மாலுமிகளில் உத்​தர பிரதேசத்​தின் பிரயாக்​ராஜைச் சேர்ந்த வணிகக் கப்​பற்​படை​யின் தலைமை அதி​காரியான வினீத் கிஷோர் மிஸ்ரா​வும் ஒரு​வர்.

அவரது குடும்​பத்​தினர் மிஸ்ரா உள்​பட 6 இந்​திய மாலுமிகளை​யும் பாது​காப்​பாக இந்​தி​யா​வுக்கு அனுப்பி வைக்​கக் கோரி பாகிஸ்தானில் உள்ள இந்​தி​யத் தூதரகத்​துக்கு கடிதம் எழுதினர். தூதரகம் சார்​பில் உறுதி​மொழிகள் வழங்​கப்​பட்ட போதிலும், 7 மாதங்​கள் ஆகி​யும் இந்​தப் பிரச்​சினை தீர்க்​கப்​படா​மல் உள்​ளது.

இதனையடுத்து, இந்த விவகாரத்​தில் தலை​யிட்டு 6 இந்​தி​யர்​களும் பாது​காப்​பாகத் திரும்​புவதை உறுதிசெய்​யுமாறு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்​றும் வெளி​யுறவு அமைச்​சகத்​திடம் மிஸ்ராவின் குடும்​பத்​தினர் வேண்​டுகோள் விடுத்​துள்​ளனர். மேலும், இப்​பிரச்சினையை மத்​திய அரசின் கவனத்​துக்கு விரைவாக கொண்டு செல்ல, தங்​களது உள்​ளூர் சட்​டமன்ற உறுப்பினர் மற்​றும் நாடாளு​மன்ற உறுப்​பினர் மூலமாகவும் அவர்கள் முயற்சி செய்து வரு​கின்​றனர்.

Spread the love