பிரதமர் மோடியின் தமிழகம் வருகையில் மாற்றம் தொடர்பாக…

பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகைதரும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெறவுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டம் மார்ச் 1 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பிப். 28 ஆம் தேதி பிரதமர் வருகை தருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையவுள்ள நிலையில், அந்தக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி சில நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் பிரதமரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் 23 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியது குறிப்பிடத்தக்கது.

More Stories
தங்கம் விலை மாலையில் அதிரடி உயர்வு
மேகாலயாவில் நிலக்கரி சுரங்க வெடி விபத்து: உரிமையாளர்கள் 2 பேர் கைது
பாகிஸ்தானில் உளவுத்துறை நடவடிக்கை: 24 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!