May 8, 2026

பிஹார் அமைச்சரவை விரிவாக்கம்: நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் உட்பட 32 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு

புதுடெல்லி: பிஹார் அரசி​யலில் பெரும் திருப்​பு​முனை​யாக, முன்னாள் முதல்​வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் நேற்று அமைச்​ச​ராகப் பதவி​யேற்​றார்.

பிஹாரில் சுமார் 2 தசாப்த கால நிதிஷ் குமாரின் ஆட்சி முடிவுக்கு வந்​து, பாஜகவைச் சேர்ந்தவர் முதல்​வ​ராகப் பொறுப்​பேற்ற சில வாரங்​களுக்​குப் பிறகு இந்த அமைச்​சரவை விரி​வாக்​கம் நடை​பெற்​றுள்​ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் கட்சிகளைச் சேர்ந்த 32 பேர் புதிய அமைச்​சர்​களாக நேற்று பதவியேற்​றுக் கொண்​டனர். அவர்​களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்​தார்.

பொறி​யியல் பட்​ட​தா​ரி​யான 50 வயது நிஷாந்த் குமார், தனது தந்தை முதல்​வ​ராக இருந்த நீண்ட கால​மும் தீவிர அரசி​யலில் ஈடுப​டா​மல் ஒதுங்​கியே இருந்​தார். தேர்​தல்​களின் போது மட்​டும் அவ்​வப்​போது தந்​தைக்​காகப் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வந்​தார்.

கடந்த மார்ச் மாதம், நிதிஷ் குமார் மாநிலங்​களவைக்​குச் செல்ல முடிவு செய்​ததைத் தொடர்ந்​து, நிஷாந்த் முறைப்​படி ஐக்​கிய ஜனதா தளம் (ஜேடி​யு) கட்​சி​யில் இணைந்​தார். ஜேடியு ஒதுக்கீட்டில் விஜய் சவுத்ரி மற்​றும் பிஜேந்​திர பிர​சாத் யாதவ் ஆகியோர் துணை முதல்​வர்​களாக நியமிக்​கப்​பட்​டனர்.

துணை முதல்வராக மறுப்பு: நிஷாந்த் அமைச்​சர​வை​யில் இணையும் போது பிஜேந்​திர பிர​சாத் யாதவ் தனது பதவியை விட்டுக் கொடுப்​பார் என ஏற்​கெனவே எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால், நிஷாந்த் துணை முதல்​வர் பதவியை ஏற்க மறுத்​து​விட்டார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. நிதிஷ் குமார் பதவி வில​கிய பிறகு, பாஜக​வின் சாம்​ராட்​ சவுத்​ரி முதல்​வ​ராகப்​ பொறுப்பேற்றுள்​ளார்​.

Spread the love