
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் தவெக-வுக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் விஜய், புதுச்சேரி மாநிலத்திற்கான புதிய நிர்வாகக் குழுவை நியமித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புதுச்சேரி மாநிலத்தில் தவெக-வின் அன்றாடப் பணிகளையும் செயல்பாட்டையும் ஒருங்கிணைக்க, புதியதாக 30 பேர் கொண்ட நிர்வாகக் குழு நியமிக்கப்படுகிறது.
இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தவெக-வுக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. தற்போது புதுச்சேரி மாநிலத்திற்கும் அதே விசில் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியிருக்கிறது.
நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம். இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் புதுச்சேரியிலும் முதல் தேர்தலிலேயே பொதுவான விசில் சின்னத்தில் தவெக போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விமல், தேர்தல் நடத்தும் அலுவலர் ஷோபா – விடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
புதுக்கோட்டை
ராணிப்பேட்டையில் போட்டியில்லை: திமுக வேட்பாளர் வினோத் காந்தி திடீர் அறிவிப்பு