July 28, 2026

புதுமையான 10 கிலோ கலவை எல்பிஜி சிலிண்டர்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம்

சென்னை: ​காஸ் இருப்பை அறிந்​து​ கொள்​ளும் வகை​யில் புது​மை​யான 10 கிலோ கலவை எல்பிஜி சிலிண்​டரை இந்​தி​யன் ஆயில் நிறு​வனம் அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது.

‘இண்​டேன் எக்​ஸ்ட்​ராலைட் நவ்’ (Indane XTRALITE NOW) என்ற புது​மை​யான 10 கிலோ கலவை எல்​பிஜி சிலிண்​டரை இந்​தி​யன் ஆயில் நிறு​வனம் அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது.

இந்த எக்​ஸ்ட்​ராலைட் நவ் இலகுரக, துருப்​பிடிக்​காத கலவை சிலிண்​டர் தொழில்​நுட்​பத்​தை​யும், டிஜிட்​டல் சேவை அமைப்​பை​யும் ஒருங்​கிணைத்​து, வாடிக்​கை​யாளர்​களுக்கு அதிக வசதி, பாது​காப்பு மற்​றும் வெளிப்​படைத்​தன்​மையை வழங்​கு​கிறது.

இந்த சிலிண்​டரின் வெளிப்​படை​யான உடல் அமைப்​பின் மூலம் எரி​வாயு இருப்பை எளி​தாக கண்​காணிக்க முடி​யும். மேலும், முன்​ப​திவு செய்த நான்கு மணி நேரத்​துக்​குள் அல்​லது வாடிக்​கை​யாளர்​கள் விரும்​பும் நேரத்​தில் சிலிண்​டர் டெலிவரி செய்​யப்​படும்.

இந்த புதிய வகை சிலிண்​டரை இந்​தி​யன் ஆயில் நிறு​வனத்​தின் தலை​வர் ஏ.எஸ்​.​சாஹ்னே தொடங்கி வைத்​தார். மேலும், 10 மற்​றும் 5 கிலோ எல்​பிஜி சிலிண்​டர்​களை நான்கு மணி நேரத்​துக்​குள் டெலிவரி செய்​யும் சேவையை​யும் தொடங்கி வைத்​தார்.

நிகழ்ச்​சி​யில் பேசிய ஏ.எஸ்​.​சாஹ்னே, “வாடிக்​கை​யாளர்​களின் வாழ்க்​கையை மேம்​படுத்​தும் போது​தான் புது​மைக்கு உண்​மை​யான அர்த்​தம் கிடைக்​கிறது.

இண்​டேன் எக்​ஸ்ட்​ராலைட் நவ், மேம்​பட்ட கலவை சிலிண்​டர் தொழில்​நுட்​பத்​தை​யும், தடையற்ற மற்​றும் மேம்​பட்ட சேவை முறையை​யும் இணைத்​து, புத்​தி​சாலித்​தன​மான, பாது​காப்​பான மற்​றும் அதிக வசதி​யான எல்​பிஜி அனுபவத்தை வழங்​கு​கிறது.

எதிர்​காலத்​துக்​கேற்ற எரிசக்தி தீர்​வு​களை வழங்​கு​ வ​தி​லும், வாடிக்​கை​யாளர் சேவை​யில் புதிய தரநிலைகளை உரு​வாக்​கு​வ​தி​லும் இந்​தி​யன் ஆயில் உறு​தி​யாக செயல்​படு​கிறது” என்​றார்​.

Spread the love