சென்னை: தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் போலீஸார் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர்.
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதன்படி செந்தில்பாலாஜி, அசோக்குமார் இருவரும் நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது அவர்களிடம் காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், செந்தில்பாலாஜியும் அசோக்குமாரும் நேற்று 2-வது நாளாக காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது, அவர்களிடம் போலீஸார் சுமார் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

More Stories
காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்வர் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு
“இலாகா அனுமதி தருவதில் காலதாமதம் ஏன் என்று எனக்கே தெரியவில்லை” – முதல்வர் ரங்கசாமி
சிவ சேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து