February 16, 2026

புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு 94.5% குழந்தைகள் உயிர்பிழைப்பு: இந்தியாவின் முதல் ஆய்வில் தகவல்

புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு 94.5% குழந்தைகள் உயிர்பிழைப்பு: இந்தியாவின் முதல் ஆய்வில் தகவல்

புதுடெல்லி: சர்​வ​தேச குழந்​தைப் பருவ புற்​று​நோய் விழிப்புணர்வு தினத்தை முன்​னிட்​டு, ‘தேசிய குழந்​தைகள் புற்றுநோ​யில் இருந்து உயிர்ப் ​பிழைத்​தவர்​கள் திட்​டம்’ என்​ப​தன் கீழ் நாட்​டின் முதல் ஆராய்ச்​சி​யில் கிடைத்த புள்​ளி விவரங்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

இதுதொடர்​பான ஆய்​வுக் கட்​டுரை பிரபல மருத்​துவ இதழான ‘லான்​செட் பிராந்​திய சுகா​தா​ரம் – தென்​ கிழக்கு ஆசி​யா’ இதழில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதன் முக்​கிய ஆசிரியர் டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யின் குழந்தை மருத்​துவ புற்​று​நோ​யியல் பிரி​வின் தலை​வர் டாக்​டர் ரச்​சனா சேத் கூறிய​தாவது: புற்​று​நோய் சிகிச்சைக்​குப் பிறகு குழந்​தைகளின் நிலை குறித்த ஆவணங்​கள் எது​வும் இல்​லை.

இதை ஆவணப்படுத்த கடந்த 2016ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை​யில் புற்​று​நோய்க்கு சிகிச்சை பெற்ற குழந்​தைகளின் விவரங்​களை சேகரித்​தோம். டெல்​லி, மும்​பை, சென்​னை, கொல்கத்​தா, பெங்​களூரு உட்பட 20 புற்​று​நோய் சிகிச்சை மையங்​களில் சிகிச்சை பெற்ற 5,400 குழந்​தைகளைப் பற்​றிய தகவல்​களை பெற்று ஆய்வு செய்தோம். புற்​று​நோய்க்கு சிகிச்சைப் பெறும் குழந்​தைகளில் கடந்த 5 ஆண்​டு​களில் 94.5 சதவீதம் பேர் உயிர் பிழைத்​துள்​ளனர்.

இந்த எண்​ணிக்கை எங்​களுக்கு ஊக்​கம் அளிக்​கிறது. புற்றுநோய்க்கு சிகிச்​சைப் பெற்​றவர்​களுக்கு மருத்​துவ ரீதி​யாக மற்​றும் உளவியல் ரீதி​யாக பல ஆண்​டு​களுக்கு தொடர்ந்து சவால்களை சந்​திக்க வேண்டி இருக்​கலாம். இது​போல்​ சிகிச்​சைக்​குப்​ பிறகு ஏற்​படும்​ ​பா​திப்​பு​களை முறைப்​படி ​நாம்​ கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​​வாறு ​டாக்​டர்​ ரச்​ச​னா சேத்​ கூறி​னார்​.

Spread the love