பழனி மே 05
பழனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவிமனோகரன் 66 ஆயிரத்து 986 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக தவெக வேட்பாளர் பிரவீன் குமார் 66, 293 வாக்குகள் பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டி 65 ஆயிரத்து 534 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் முருகேஸ்வரி 6300 வாக்குகள் பெற்றார். தொடர்ந்து வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன் அவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் அதிகாரிகளால் வழங்கப்பட்டது. அப்பொழுது அவரது தந்தை முன்னாள் எம்எல்ஏ குப்புசாமி, மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ் பி அன்வர்தீன், நகர செயலாளர் யூ முருகானந்தம் மற்றும் அதிமுக வினர் உடன் இருந்தனர்.
போட்டோ புட் நோட்
பழனி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனுக்கு வெற்றி சான்றுகள் வழங்கப்பட்டது. அருகினில் முன்னாள் எம்எல்ஏ குப்புசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ் பி அன்வர்தீன், நகர செயலாளர் யூ முருகானந்தம், ஆகியோர் உள்ளனர்

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது