June 29, 2026

பெருமுளை முத்தையா சுவாமி பச்சையம்மன் திருக்கோவிலில் வரும் 5ம் தேதி கும்பாபிஷேகம்

கடலூர், ஜூன்.29- 

பெருமுளை முத்தையா சுவாமி மற்றும் பச்சையம்மன் கோவிலில், வரும் ஜூலை 5ம்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. 

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் முத்தையா சுவாமி, பச்சையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 23 ஆண்டுகளுக்கு பிறகு, ஜூலை 5 ம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த சிறப்பு வழிபாடு, வரும் 29ம் தேதி காலை 6:00 மணியளவில் கணபதி ஹொமத்துடன் துவங்குகிறது. ஜூலை 2ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து, 3ம் தேதி காலை 8:00 மணியளவில் இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5:30 மணியளவில் மூன்றாம் கால யாக பூஜை, 4ம் தேதி காலை 8:30 மணியளவில் நான்காம் கால யாக பூஜை, மாலை 5:30 மணியளவில் ஐந்தாம் கால யாக பூஜை நடக்கிறது.5ம் தேதி காலை 6:00 மணியளவில் ஆறாம் கால யாக பூஜை, 9:00 மணியளவில் கடம் புறப்பாடாகி காலை 9:30 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை, செயல் அலுவலர் பாக்கியராஜ், ஆய்வாளர் வசந்தம், பரம்பரை அறங்காவலர்கள் கலைச்செல்வம், செல்வம், வாழப்பாடி கலைமணி ராமமூர்த்தி, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி, புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன், சோழன் குமார் வாண்டையார், உபயதாரர்கள், குலதெய்வ பக்தர்கள், கிராம மக்கள், திருக்கோவில் பணியாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்

Spread the love