August 13, 2026

95 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி.

திருப்பூர் ஆகஸ்ட்13

நொய்டாவில் டிசம்பர் 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் திருப்பூர் ஜவுளித்துறையினர் பங்கேற்க அழைப்பு ஜவுளி உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில், இந்தியா ஐடிஎம்இ 2026 சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி நொய்டாவில் டிசம்பர் 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.95 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்தக் கண்காட்சி குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஜவுளித்துறையினருக்கு இந்தியா ஐடிஎம்இ சொசைட்டி சார்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது.2.40 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 18 அரங்குகளில் நடைபெறும் கண்காட்சியில், ஜவுளி இயந்திரங்கள், ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும், சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கவும் திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஐடிஎம்இ சொசைட்டி தலைவர் கேத்தன் சாங்வி கூறுகையில், இந்தக் கண்காட்சியில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரங்களை காட்சிப்படுத்த உள்ளதாகவும், சுமார் 1.5 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், டிசம்பர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெறும் ‘டெக்ஸ்டைல் ஹொரைசன்ஸ்’ உள்ளிட்ட அறிவுசார் அமர்வுகள் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஜவுளித்துறையின் எதிர்காலம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என்றும், ஜவுளித்துறையினர் அனைவரும் கண்காட்சியில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Spread the love