September 10, 2026

பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் பிரதமர் மோடி – ஒரு மாத சேவை இயக்கத்துக்கு பாஜக ஏற்பாடு

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி​யின் பொது வாழ்க்​கை​யில் 25 ஆண்​டு​கள் நிறைவடைவதை முன்​னிட்​டு, பாஜக சார்​பில் ஒரு மாத காலத்​திற்கு ‘சேவா சங்​கல்ப் அபி​யான்’ என்ற மாபெரும் மக்கள் சேவை இயக்​கத்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

நரேந்​திர மோடி கடந்த 2001-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி முதன்​முறை​யாக குஜ​ராத் முதல்​வ​ராக பதவி​யேற்​றார். தொடர்ந்து, 13 ஆண்​டு​கள் குஜ​ராத் முதல்​வ​ராக பணி​யாற்​றிய அவர், 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி நாட்​டின் பிரதம​ராக பதவியேற்​றார். பிரதமர் பதவி​யில் 12 ஆண்​டு​களை நிறைவு செய்து, தொடர்ந்து நாட்​டுக்கு சேவை செய்து வரு​கிறார்.

இதன் மூலம் வரு​கிற அக்​டோபர் 7-ம் தேதி​யுடன் அவர் அரசுப் பதவி​யில் 25 ஆண்​டு​களை நிறைவு செய்ய உள்​ளார். இதையொட்டி பாஜக சார்​பில் ஒரு மாத காலத்​திற்கு ‘சேவா சங்கல்ப் அபி​யான்’ என்ற மாபெரும் மக்​கள் சேவை இயக்கத்துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த இயக்கத்துக்காக பாஜக தேசிய தலை​வர் நிதின் நவின் தலைமையில் தேசிய ஒருங்​கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

டெல்​லி​யில் உள்ள பாஜக தலை​மையகத்​தில் அக்​கட்​சி​யின் தேசியத் தலை​வர் நிதின் நவீன் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “பிரதமரின் பொதுச் சேவைக்​கான அர்ப்​பணிப்​பைப் பிரதிபலிக்​கும் நோக்​கம் கொண்ட இந்த மக்​கள் சேவை இயக்​கம் செப்​டம்​பர் 17 முதல் அக்​டோபர் 17 வரை நடை​பெறும்.

இதில் கோடிக்​கணக்​கான பாஜக தொண்​டர்​கள் பங்​கேற்​பார்​கள். செப்​டம்​பர் 17-ம் தேதி நாடெங்​கிலும் ஒரு நாள் முழு​வதும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்ள ரத்த தான முகா​முடன் இந்த இயக்​கம் தொடங்கும்.

அதைத் தொடர்ந்து ஒரு மாத காலத்​துக்கு தூய்​மைப் பணி​கள், மரக்​கன்று நடு​தல் மற்​றும் நலத்​திட்​டங்​களை வழங்குதல் உள்​ளிட்ட நிகழ்ச்​சிகள் தொடரும். இந்த இயக்​கத்​தில் சாதாரண குடிமக்​களும் இணைந்து தங்​களால் முடிந்த சேவைகளை செய்ய கேட்​டுக்​ கொள்​ளப்​படு​கிறார்​கள்​” என்​றார்​.

Spread the love