July 30, 2026

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.7,000 கோடி கடன் வழங்கும் திட்டத்தை பட்ஜெட்டில் அறிவிக்க அரசு திட்டம்

சென்னை: சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் புதிய திட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு. செய்துள்ளது. தமிழ்நாட்டில் இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் ரூ.7,000 கோடி கடன் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டுறவுத் துறை மற்றும் பட்ஜெட் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவிருக்கும் மாநில பட்ஜெட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இளம் பெண்கள், நலிவடைந்த நிலையில் உள்ளவர்களை தொழில் முனைவோராகும் வகையில் புதிய திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் இத்திட்டத்துடன் சேர்த்து, வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love