November 17, 2026

மகாராஷ்டிராவில் பெண் கைதிகளுக்கு முதல் திறந்தவெளி சிறை குடியிருப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் பெண் கைதி​களுக்​கென்றே மாநிலத்தின் முதல் திறந்தவெளி சிறைக் குடி​யிருப்பை அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

தகுதி​யுள்ள கைதி​கள் தங்​கள் குழந்​தைகள், குடும்​பத்​தினருடன் தங்கி, வேலைக்​குச் சென்று, சிறைக்கு வெளி​யி​லான வாழ்க்கைக்கு படிப்​படி​யாகத் தயாராகலாம். நாசிக், சத்​ரபதி சம்பாஜிநகர் ஆகிய இடங்​கள் இதற்​காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தகுதி​யான கைதி​களை​யும் அவர்​களுக்​கான வேலை வாய்ப்​பு​களை​யும் கண்​டறிந்து, அடுத்த ஆண்டே இந்த வசதி​களை செயல்​படுத்​து​மாறு உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்தர​வின் பேரில் ஒரு குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

மும்பை உயர் நீதி​மன்ற நீதிபதி பாரதி டாங்ரே தலை​மையி​லான இக்​குழு​வில், உள்​துறை கூடுதல் தலை​மைச் செய​லா​ளர் ராதிகா ரஸ்தோகி உறுப்​பின​ராகவும், சிறைத்​துறை கூடுதல் தலைமை இயக்​குநர் சுஹாஸ் வார்கே உறுப்​பினர்-செய​லா​ளராகவும் செயல்​படு​கின்​றனர்.

இத்​திட்​டத்​தின் கீழ் பெண் கைதி​கள் தங்களது குழந்​தைகள், குடும்​பத்​தினருடன் ஒரே வளாகத்​தில் தங்கி வாழ அனுமதிக்​கப்​படுவார்​கள். தற்​போது பராமரிப்பு இல்லங்​களில் உள்ள குழந்​தைகள், இங்கு தாயாருடன் தங்கி அருகிலுள்ள பள்​ளி​களில் படிக்க வழிவகை செய்​யப்​படும். உறுதியான எண்ணிக்கை தெரிந்த பிறகு, பெண்​களுக்​கான வேலை​வாய்ப்பு உள்​ளூர் பகுதி​யில் கண்​டறியப்​படும்.

இந்​தி​யச் சிறைப் புள்​ளி​விவரங்​கள் 2024 அறிக்​கை​யின்​படி, நாட்டிலுள்ள 103 திறந்​தவெளிச் சிறைகளில் 19 மகாராஷ்டிராவில் உள்ளன. ஆனால், பெண்​களுக்​கென புனே எர​வாடா மகளிர் சிறை, அகோலா ஆகிய இரண்டு இடங்​களில் மட்​டுமே திறந்​தவெளிச் சிறை வசதி​கள் உள்​ளன. ராஜஸ்தானின் சங்​கானேர் திறந்​தவெளிச் சிறையில் 400-க்​கும் மேற்​பட்ட கைதி​கள் குடும்பத்துடன் தங்கி, மளி​கைக் கடை நடத்​து​வது உள்​ளிட்ட பணிகளைச் செய்து வருகின்​றனர்.

Spread the love