சென்னை: “மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம்” என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியின் 78-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் இன்று ‘தியாகிகள் தினம்’ அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “#MartyrsDay: மதவெறியை மாய்ப்போம். மகாத்மாவைப் போற்றுவோம். அமைதி வழியின் வலிமையை உலகுக்குக் காட்டி, ஒற்றுமையுணர்வு தழைக்கப் பாடுபட்டதால், கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி, ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நிலைத்து வாழ்வார்.
மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம். வெல்வோம் ஒன்றாக” என்று குறிப்பிட்டுள்ளார்.

More Stories
திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வு செய்த புகைப்படம்
பழனி அருகே திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்
இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி