August 1, 2026

மதிப்புக் கூட்டப்பட்ட பிளாஸ்டிக் பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி மாநிலமாக உருவெடுக்கும்: தொழில் துறை செயலர் நம்பிக்கை

சென்னை: ம​திப்​புக் கூட்​டப்​பட்ட பிளாஸ்​டிக்பொருட்​கள் ஏற்றுமதியில் தமிழகம் முன்​னணி மாநில​மாக உரு​வெடுக்​கும் என்று குறு, சிறு, நடுத்தர தொழில் துறை செயலர் பிரதீப் யாதவ் நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார்.

மத்​திய வர்த்​தகம், தொழில் துறை அமைச்​சகத்​தின்​கீழ் செயல்​படும் பிளாஸ்​டிக் ஏற்​றுமதி மேம்​பாட்டு கவுன்​சில், மத்​திய பெட்​ரோகெமிக்​கல்ஸ் பொறி​யியல், தொழில்​நுட்ப நிறு​வனங்​கள் சார்​பில் இந்த ஆண்​டுக்​கான தொழில் துறை மாநாடு சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறு​வனங்​கள் துறை செயலர் பிரதீப் யாதவ் இதை தொடங்கி வைத்து பேசி​ய​தாவது: வாகன உதிரி​பாகங்​கள், பொறி​யியல், மருத்​து​வம், மின்​னணு​வியல் என பல்​வேறு துறை​களின் பயன்​பாடு​களுக்​கான பிளாஸ்​டிக் பொருட்​களில் கவனம் செலுத்​து​வதன் மூலம், மதிப்​புக் கூட்​டப்​பட்ட பிளாஸ்​டிக் பொருள் ஏற்​றும​தி​யில் நாட்​டின் முன்​னணி மாநில​மாக தமிழகம் உரு​வெடுக்​கும்.

மேலும், மாநிலத்​தின் வலு​வான தொழில் துறை சூழல், உலகத் தரத்​திலான துறை​முக உள்​கட்​டமைப்பு மற்​றும் 23 லட்​சத்​துக்​கும் அதி​க​மான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறு​வனங்​கள் ஆகியவை ஏற்​றுமதி வளர்ச்​சிக்​கான வலிமை​யாக திகழ்​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

‘இந்​தி​யா​வின் புதுமை மற்​றும் ஏற்​றுமதி வளர்ச்​சி​யின் எதிர்​காலம்’ என்ற மையக் கருத்​துடன் மாநாடு நடத்​தப்​பட்​டது. இதில் 200-க்​கும் மேற்​பட்ட கொள்கை வகுப்​பாளர்​கள், தொழில் துறை தலை​வர்​கள், ஏற்​றும​தி​யாளர்​கள், தொழில்​நுட்​பம் வழங்​கு​வோர், நிதி நிறு​வனங்​கள், கல்​வி​யாளர்​கள், குறு சிறு நடுத்தர தொழில் துறை​யினர் பங்​கேற்​று, உலகளா​விய பிளாஸ்​டிக் துறை​யில் இந்​தி​யா​வின் போட்​டித் திறனை மேம்​படுத்​து​வதற்​கான உத்​தி​கள் குறித்து விவா​தித்​தனர்.

இந்​தியா சமீபத்​தில் கையெழுத்​திட்​டுள்ள சுதந்​திர வர்த்தக ஒப்​பந்​தங்​கள், பெட்​ரோகெமிக்​கல் துறை​யின் எதிர்​காலம், பொறி​யியல் பிளாஸ்​டிக் உள்​ளிட்ட பல்​வேறு தலைப்​பு​களில் நிபுணர்​களின் அமர்​வு​கள் நடை​பெற்​றன.

இதில் பிளாஸ்​டிக் ஏற்​றுமதி மேம்​பாட்டு கவுன்​சில் இயக்​குநர் ஸ்ரீபாஷ் தாஸ்​மொஹபத்​ரா, பிரான்ஸ் தூதரக துணைத் தலை​வர் கிறிஸ்​டோஃப் பிரமூல், வெளி​நாட்டு வர்த்தக இயக்​குநரக கூடு​தல் தலைமை இயக்​குநர் ராஜலட்​சுமி தேவ​ராஜ், பிளாஸ்​டிக் ஏற்​றுமதி மேம்​பாட்டு கவுன்​சில் பிராந்​திய இயக்​குநர் (தெற்​கு) ரூபன் ஹோப்டே ​பங்​கேற்​றனர்​.

Spread the love