July 2, 2026

மயக்கமடைந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றிய ஓட்டுநர், நடத்துநருக்கு அமைச்சர் பாராட்டு

சென்னை: அரசு பேருந்தில் உடல் நலக் குறைவால் மயங்கிய பெண் பயணியை, துரிதமாக செயல் பட்டு மருத்துவமனையில் அனு மதித்து உயிரை காப்பாற்றிய ஓட்டுநர், நடத்துனருக்கு பாராட் டுகள் குவிகின்றன.

திருவான்மியூரில் இருந்து கிளாம்பாக்கம் செல்லும் அரசு பேருந்து ( வழித்தட எண் 91) ஒன்றில், நேற்றுமுன்தினம் மாலை பெருங்குடியில் பெண் ஒருவர் ஏறியுள்ளார்.

பேருந்து பல்லாவரம் அருகே வந்த போது, அந்த பெண் பயணி திடீரென பேருந்தில் மயக்கமடைந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக ஓட்டுநர், நடத் துநரிடம் தகவல் தெரிவித்தனர்.

நிலைமையின் அவசரத்தை உணர்ந்த பேருந்து ஓட்டுநர், தாமதிக்காமல் பேருந்தை நேரடியாக தாம்பரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனைக்கு இயக்கினார்.

பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணி கள் இருந்தனர். மருத்துவமனையை அடைந்ததும், மற்ற பயணிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் உதவியுடன் மயக்கமடைந்த பெண் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப் பட்டு அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை யடுத்து பேருந்து மீண்டும் அதன் வழித்தடத்தில் இயக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், சேவையை முதன்மைப்படுத்தி மனிதநேயத் துடன் செயல்பட்ட பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநருக்கும், அவருக்கு துணை நின்ற பயணி களுக்கும் சமூக வலைதளங் களிலும், பொதுமக்களிடை யிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதனிடையே, போக்கு வரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், பேருந்து ஓட்டுனர் லட்சுமணன், நடத் துனர் கீதர் இளையராஜா ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார்.

Spread the love