சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800-க்கு விற்பனை…

ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800-க்கு விற்பனை.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.1,840 உயா்ந்து ரூ.1,17,200-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,580-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ. 1,16,640-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,600-க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800-க்கு விற்பனையாகிறது.
இந்தியாவில், சென்னையில் தங்கம் வர்த்தகம் மற்றும் தங்க விலை ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. திருமணம் அல்லது பிறந்தநாள் விழாக்கள் போன்ற தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு மட்டுமல்லாமல், அட்சய திருதியை போன்ற நிகழ்வுகளுக்கும் சென்னையில் தங்கம் பரவலாக வாங்கப்படுகிறது, அப்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏராளமான தள்ளுபடிகள், குறைக்கப்பட்ட விகிதங்கள், அற்புதமான சலுகைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பெரும்பாலும், சென்னையில் தங்கம் வாங்கும் ஒருவரின் அந்தஸ்தையும் செல்வத்தையும், பாரம்பரிய முதலீட்டு முறையைப் பின்பற்றுவதாகவும் உள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை
வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

More Stories
“அரசு என எதுவும் உள்ளதா?” – கும்மிடிபூண்டி 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு கனிமொழி கண்டனம்
அதிமுக கப்பலை தளபதி மூழ்க விடமாட்டார்! மதுராந்தகத்தில் ஆதவ் அர்ஜுனா பேச்சு
“திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இல்லை..” – CPI வீரபாண்டியன்