
புதுச்சேரி: “புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் கையும், சூரியனும் வெற்றி பெறும். பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்க குழு அமைத்த பிறகு கூட்டணி கட்சிகளுடன் பேசுவோம்” என்று மாநில காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான வைத்திலிங்கம் தெரிவித்தார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரியில் கடந்த 21-ம் தேதி முதல் புதுவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் என்ஆர்.காங்கிரஸ், பாஜக அரசை கண்டித்து பாதயாத்திரை நடந்தது. நாளை புதுவை ராஜீவ் காந்தி சிலையில் தொடங்கி நேருவீதி பெரிய மார்க்கெட் வரை பாதயாத்திரை நடக்கிறது. இந்த பாதயாத்திரையில் அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளரும், ராகுல் காந்தியின் ஆலோசகருமான கே.சி.வேணுகோபால் எம்பி பங்கேற்கிறார். அவர் பாதயாத்திரையை நிறைவு செய்து பேசுகிறார்.
மாஹேயில் 24-ல் பாதயாத்திரையும், அடுத்தக்கட்டமாக காரைக்கால், ஏனாமில் நடக்கும். அமித் ஷா மீனவர்கள் பற்றி காரைக்காலில் ஏதும் பேசவில்லை. இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த படகுகளை மீட்பது பற்றிகூட பேசவில்லை.
போலி மருந்து நபர் வழக்கில் ரூ.10 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. தற்போது காங்கிரஸ் ஆட்சியில் ரூ.15 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என சொல்லும் அமித் ஷா ஏன் ஐந்து ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில அந்தஸ்து தராவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாக கூறிய ரங்கசாமி, அதை அமித் ஷாவிடம் பேசாமல் கூட்டணி தொடர்கிறது.
நாராயணசாமி ஆட்சி நன்றாக இருக்கிறது என்று சொல்லும் நிலையில்தான் அமித் ஷா உள்ளார். 30 நாட்களுக்குள் ரூ.15 ஆயிரம் கோடி ஊழல் தொடர்பாக ஆதாரம் காட்டுங்கள், இல்லாவிட்டால் ஒரு கோடி ரூபாய்க்காகவது ஆதாரம் காட்டுங்கள்.
கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தமிழகத்தில் திமுகவுடன் ஆரம்பிக்கும்போது, புதுச்சேரியிலும் தொடங்கும். திமுக அலுவலகத்தில் கூட்டம் நடந்தபோது நான் ஊரில் இல்லை. காங்கிரஸில் பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கவில்லை. குழு அமைத்த பிறகு கூட்டணி கட்சிகளுடன் பேசுவோம். 30 தொகுதிகளிகளிலும் கையும், சூரியனும் வெற்றி பெறும்” என்று அவர் கூறினார்

More Stories
‘அருவருப்பான கருத்து’ – நயினார் நாகேந்திரனுக்கு நடிகை த்ரிஷா கண்டனம்
“கூட்டணி குறித்து கட்சியினர் பொதுவெளியில் பேசக்கூடாது” – செல்வப்பெருந்தகை
“மீனவர்கள் பிரச்சினையில் தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” – விஜய்