தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் ஆறு மணி நிலவரப்படி 84.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆறு மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று துவங்கி விறுவிறுப்பாக நடந்தது. காலையில் ஆறு மணியில் வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து ஆறு மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த பூத்களில் அனைத்து கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் EVM எந்திரங்களுக்கு சீல் வைத்துள்ளனர் அதிகாரிகள். சில இடங்களில் மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்குப்பதிவு மையத்திற்கு வருகை தந்தவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இதனிடையில் இந்த தேர்தலில் அதிகமான வாக்குப்பதிவு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கரூரில் அதிகபட்சமான வாக்குகள் பதிவாகியுள்ளன. அந்த மாவட்டத்தில் 89.32 வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து சேலத்தில் 88.02 மற்றும் நாமக்கலில் 87.63 சதவிகிதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதனிடையில் முதலமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகள் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.
முதல்வர் மு.க. ஸ்டாலின்
அதன்படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 83.58 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த முறை இதே தொகுதியில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், இந்த தடவையும் கொளத்தூரில் களமிறங்கியுள்ளார். தன்னுடைய பரப்புரையையும் இதே தொகுதியில் நிறைவு செய்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இதுவரை வெளியான கருத்து கணிப்புகளின் படி கொளத்தூரில் முதல்வருக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
என்டிஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளாரான எடப்பாடி பழனிசாமி தொகுதியில் 89.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த பகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், இந்த தடவையும் எடப்பாடியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் பழனிசாமி. எடப்பாடியில் கடந்த முறை பெற்ற வாக்குகளை விடவும், இந்த தடவை அதிகமான வாக்குகளை பெறுவேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இத்நிட்டையில் இந்த தொகுதியில் தவெக வேட்பாளரை போட்டியிட விடாமல் சதி செய்து விட்டதாக சர்ச்சைகள் எழுந்தது.
நாதக சீமான்
நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு 71.88% வாக்குகள் பதிவாகியுள்ளன. சீமான் போட்டியிடுவதாள் காரைக்குடி நட்சத்திர தொகுதியாக இந்த சட்டமன்ற தேர்தலில் கவனம் ஈர்த்தது. ஆனால் இங்கு மற்ற முதலமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை காட்டிலும் குறைந்த அளவிலான வாக்குகளே பதிவாகியுள்ளன.
திருச்சி கிழக்கில் விஜய் வெற்றி பெறுவாரா.. நம்பிக்கையுடன் கே.என். நேரு சொன்ன வார்த்தை
இரண்டு இடங்களில் விஜய் போட்டி
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளரான விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடும் சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் 86.72% வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு பணிமனை அமைத்து தவெகவினர் தங்கள் தலைவருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். விஜய்யும் சில வீடுகளில் நேரில் சென்று வாக்கு கேட்டார். அதோடு பெரம்பூர் தொகுதி பணிமனையில் விசில் கோலத்தையும் போட்டார் விஜய்.
திருச்சி கிழக்கு
அதே போல் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் 79.32% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு இரண்டு தடவை பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவரான விஜய். திருச்சி கிழக்கில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். இதனிடையில் இன்று வாக்குப்பதிவுக்கு கே.என். நேரு திருச்சியில் உள்ள அனைத்து தொகுதிகளை திமுக கைப்பற்றும். உதயசூரியன் தான் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையத்திடம் தவெக கோரிக்கை
சென்னை நீலாங்கரையில் வாக்களித்தார் தவெக தலைவர் விஜய்
234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: பிரச்சாரத்தை நிறைவு செய்த உதயநிதி திட்டவட்டம்