July 5, 2026

முதல்வர் விஜய் அறிவுறுத்தலின்படி ‘தாயுமானவர்’ திட்டம் 60 வயது வரை விரிவாக்கம்

சென்னை: ‘தா​யு​மானவர்’ திட்​டத்தை 60 வயதினரும் பயன்​பெறும் வகை​யில் விரி​வாக்​கம் செய்ய தமிழக அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. தவெக அரசின் 2026-27-ம் நிதி ஆண்​டுக்​கான முதல் பட்​ஜெட் இந்த மாத இறு​தி​யில் தாக்​கல் செய்​யப்பட உள்​ளது.

இதில் இடம்​பெற வேண்​டிய புதிய திட்​டங்​கள், தற்​போதைய திட்​டங்​களின் செயல்​பாடு​கள் குறித்து ஆய்வு செய்​வதற்​காக முதல்​வர் விஜய் தலை​மை​யில் துறை​கள் ரீதி​யான ஆலோ​சனைக் கூட்​டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று முன்​தினம் தொடங்​கியது.

முதல் நாளில் கூட்​டுறவு, உணவுத் துறை, வரு​வாய், பேரிடர் மேலாண்மை துறை​கள் சார்ந்த ஆலோ​சனை நடை​பெற்​றது. இந்​நிலை​யில், 2-வது நாளான நேற்று ஊரக வளர்ச்​சித் துறை மற்​றும் நெடுஞ்​சாலைகள் துறை​கள் தொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் முதல்​வர் விஜய் தலை​மை​யில் நடை​பெற்​றது.

இதில் அமைச்​சர்​கள் என்​.ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, மரிய வில்​சன், தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் மற்​றும் துறைச் செயலர்​கள், அலு​வலர்​கள் கலந்​து​கொண்​டனர்.

ஓராண்​டு, மூன்​றாண்டு மற்​றும் ஐந்​தாண்டு திட்​டங்​கள், துறை​களின் செயல்​பாடு​கள் உட்பட பல்​வேறு அம்​சங்​கள் குறித்து இதில் ஆலோ​சிக்​கப்​பட்​டது. துறை வாரி​யான ஆலோ​சனைக் கூட்​டங்​கள் ஜூலை 22-ம் தேதி வரை தொடர்ந்து நடை​பெற உள்​ளன.

இந்​நிலை​யில், ‘தா​யு​மானவர்’ திட்​டத்தை 60 வயது வரை விரி​வாக்​கம் செய்ய அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​உள்​ளது. இதுகுறித்து கூட்​டுறவுத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: முதி​யோர், மாற்​றுத் திற​னாளி​களின் வீடு​களுக்கு நேரடி​யாக சென்று ரேஷன் பொருட்​களை வழங்​கும் ‘தா​யு​மானவர்’ திட்​டம் கடந்த திமுக ஆட்​சி​யில் கொண்டு வரப்​பட்​டது.

புதி​தாக ஆட்​சிப் பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசும் இத்​திட்​டத்தை தொடர்ந்து செயல்​படுத்தி வரு​கிறது. தற்​போது 70 வயதுக்கு மேற்​பட்ட முதி​ய​வர்​கள், மாற்​றுத் திற​னாளி​கள் என சுமார் 20 லட்​சம் பேருக்கு இத்​திட்​டத்​தின்​கீழ் வீடு தேடி ரேஷன் பொருட்​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில், முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தலின்​படி, 60 வயதுக்கு மேற்​பட்ட முதி​ய​வர்​கள், மாற்​றுத் திற​னாளி​கள், கைம்​பெண்​களும் பயன்​பெறும் வகை​யில் இத்​திட்​டம் விரி​வாக்​கம் செய்​யப்பட உள்​ளது.

முதல்​வர் தலை​மை​யில் கடந்த 2-ம் தேதி நடை​பெற்ற பட்​ஜெட் தொடர்​பான ஆய்​வுக் கூட்​டத்​தில் இந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது. பட்​ஜெட்​டில் இதற்​கான அறி​விப்​பு வெளி​யாகும்​. இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​தனர்​.

Spread the love