மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்கள் நலன்கள் பாதிக்கப்பட தவெக அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது என அக்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு – கர்நாடகா இடையே மேகதாது அணை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அது குறித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் பேச்சு நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, வரும் 3-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு தரப்பில், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், சந்திப்பு குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தனக்கு கடிதம் எழுதியதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.

More Stories
இடைத்தேர்தல்: தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா மனு தாக்கல்
அண்ணா பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி புகழ் வணக்கம்
அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து ஐகோர்ட் உத்தரவு