மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்க வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்க வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேகாலயா மாநிலம், ஜெயின்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் வியாழக்கிழமை டைனமைட் திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் 18 பேர் பலியாகினர். மேலும ஒருவர் காயமடைந்தார்.
Advertisement
நிலக்கரி பிரித்தெடுப்பதற்காக பாறைகளை உடைக்க இந்த டைனமைட் பயன்படுத்தப்படுகிறது. சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சுரங்க விபத்து தொடர்பாக உரிமையாளர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் கூறுகையில், கைது செய்யப்பட்ட சுரங்க உரிமையாளர்கள் உள்ளூர்வாசியைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை நாங்கள் கைது செய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார்.
மேகாலயாவில் எலி துளை நிலக்கரி சுரங்கத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2014 ஆம் ஆண்டு தடை விதித்தது. தடை இருந்தபோதிலும், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்கின்றன.

More Stories
‘ஏஐ’யால் வழக்கறிஞராக முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து
5 ஆண்டில் பொருளாதாரம் ரூ.40 லட்சம் கோடியாகும்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை
யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு