March 18, 2026

மேற்கு வங்கத்தில் 144 தொகுதிக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு: மம்தாவை எதிர்த்து சுவேந்து போட்டி

மம்தா பானர்ஜியை எதிர்த்து பவானிபூர் தொகுயில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் 144 தொகு​தி​களுக்​கான முதல்கட்ட வேட்​பாளர் பட்​டியலை பாஜக நேற்று வெளி​யிட்​டது.

தமிழகம், அசாம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேற்கு வங்​கத்​தில் முதல்​கட்​ட​மாக ஏப்​ரல் 23ம் தேதி 152 தொகு​தி​, 2ம் கட்​ட​மாக ஏப்ரல் 29ம் தேதி 142 தொகு​தி​களுக்​கு வாக்​குப் பதிவு நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் மேற்கு வங்க தேர்​தலுக்​கான முதல்​ கட்ட வேட்​பாளர் பட்​டியலை பாஜக நேற்று வெளி​யிட்​டது. இதில் 144 தொகு​தி​களுக்​கான வேட்​பாளர்​கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சுவேந்து அதி​காரி, திலீப் கோஷ், அக்​னிமித்ரா பால், ஸ்வபன் தாஸ்​குப்தா போன்ற முக்​கி​யத் தலை​வர்​கள் அதில் இடம்​பெற்றுள்​ளனர். மே.வங்க பாஜக முன்​னாள் தலை​வ​ரான திலீப் கோஷ், கரக்​பூர் சதார் தொகு​தி​யில் போட்​டி​யிடு​கிறார். அதேவேளை​யில் சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் சுவேந்து அதி​காரி பவானிபூர், நந்​தி​கி​ராம் ஆகிய 2 தொகு​தி​களில் போட்டியிட உள்​ளார்.

முதல்​வர் மம்தா பானர்ஜி தற்​போது பவானிபூர் எம்​எல்​ஏ​வாக இருக்​கும் நிலை​யில் அவருக்​கும் சுவேந்து அதி​காரிக்​கும் இடையே நேரடிப் போட்​டிக்​கான சூழல் உரு​வாகி​யுள்​ளது. 2021 தேர்​தலில், சுவேந்து அதி​காரி நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் மம்தாவை தோற்​கடித்​துள்​ளார்.

இதற்​கிடை​யில் பாஜக தலை​வர் அக்​னிமித்ரா பால், அசன்​சோல் தெற்கு தொகு​தி​யிலும், மாநிலங்​களவை முன்​னாள் எம்​.பி. ஸ்வபன் தாஸ்​குப்​தா, ராஷ்பி​காரி தொகு​தி​யிலும் போட்​டி​யிட உள்​ளனர். மேற்கு வங்​கத்​தில் கடந்த 2021-ல் நடந்த தேர்​தலில், மம்தா பானர்ஜி தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ்​ 215 தொகு​தி​களை கைப்​பற்​றியது. ​பாஜக 77 தொகு​தி​களில்​ வென்​று முக்​கிய எதிர்​க்​கட்​சி​யாக உரு​வெடுத்​தது.

Spread the love