February 21, 2026

மே.வங்க எஸ்ஐஆர் பணியில் நீதிபதிகள் நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்

புதுடெல்லி: மேற்​கு​வங்க எஸ்​ஐஆர் பணி​கள் தொடர்​பான முரண்​பாடுகள், ஆட்​சேப மனுக்​களை பரிசீலிக்க நீதிப​தி​களை நியமிக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டு உள்​ளது.

மேற்​கு​வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) நடை​பெறுகிறது. இதை எதிர்த்து அந்த மாநில முதல்​வர் மம்தா பானர்ஜி உள்​ளிட்​டோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மனுக்​களை தாக்​கல் செய்​துள்​ளனர். இந்த மனுக்​களை தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

இந்த சூழலில் எஸ்​ஐஆர் பணி தொடர்​பான முரண்​பாடு​கள் மற்​றும் ஆட்​சேப மனுக்​களை பரிசீலிக்க மாவட்ட நீதிப​தி​கள், மாவட்ட முன்​னாள் நீதிப​தி​களை பணி​யில் அமர்த்த கொல்​கத்தா உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​திக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

‘‘எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் மேற்​கு​வங்க அரசுக்​கும் தேர்​தல் ஆணைய அதி​காரி​களுக்​கும் இடையே நம்​பிக்கை அற்ற சூழல் நில​வுவதை கருத்​தில் கொண்டு இந்த உத்​தரவு பிறப்​பிக்​கப்​படு​கிறது. எஸ்​ஐஆர் பணி​களில் ஈடு​படும் மாவட்ட நீதிப​தி​களுக்கு உரிய பாது​காப்பை வழங்க உத்​தர​விடு​கிறோம். எஸ்ஐஆர் பணி​களில் ஈடு​பட்ட அதி​காரி​களுக்கு அச்​சுறுத்​தல் ஏற்​படுத்​தி​யது தொடர்​பாக கூடு​தல் பிர​மாணப் பத்​திரத்தை தாக்​கல் செய்ய டிஜிபிக்கு உத்​தர​விடு​கிறோம்’’ என்று உச்​ச நீதி​மன்​றம்​ தெரி​வித்​துள்​ளது.

Spread the love