உலகத் தாய்மொழி நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு குறித்து…

முதல்வர் மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்
உலகத் தாய்மொழி நாளையொட்டி, “தமிழே நீ வாழ்ந்திடு” என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகத் தாய்மொழி நாளையொட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது.
தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி!
நம் தமிழைக் காத்து – அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு! என கூறியுள்ளார்.

More Stories
கொடைக்கானலில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் தவிப்பு
மாவட்ட தோதல் அலுவலா்-மாவட்ட ஆட்சியா் அவா்கள் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் பணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்ட புகைப்படம்
கொள்ளிடம் பேருந்து நிறுத்தத்தின் அவல நிலை: அடிப்படை வசதிகள் வேண்டி பயணிகள் அவசரக் கோரிக்கை!