இந்திய குடியரசுத் தலைவராக நான் 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பணியாற்றிய ஐந்து ஆண்டுகளில், பிரதமராக நரேந்திர மோடியை மிக நெருக்கமாகக் கவனித்துள்ளேன். அந்த அனுபவத்தின் அடிப்படையிலும் பொது வாழ்வில் அவருடனான எனது தொடர்பின் அடிப்படையிலும் அவரது பிறந்த தினத்தையொட்டி சில எண்ணங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
2001 அக்டோபரில் குஜராத் முதல்வராகவும், 2014 முதல் பிரதமராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் மோடி, ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்னும் எளிமையான ஆனால் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
பல தசாப்தங்களாக வடகிழக்குப் பிராந்தியம் இந்தியாவின் தொலைதூர விளிம்புப் பகுதியாக பேசப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் அது இந்தியாவின் முன்னேறிய முகமாகவும், தென்கிழக்கு ஆசியாவிற்கான நுழைவு வாயிலாகவும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. 2014 நவம்பர் முதல் பிரதமர் மோடி அப்பகுதிக்கு 83 முறைக்கும் மேல் பயணித்துள்ளார். இப்பயணங்கள் போக்குவரத்து, உள்கட்டமைப்பு, முதலீடு, அமைதிக்கான தொடர்ச்சியான முன்முயற்சி ஆகியவற்றுடன் இணைந்துள்ளன. அப்பகுதியில் 12 முக்கிய அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
அத்துடன் 2014-15-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் வளர்ச்சிக்காக ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய தசாப்தத்தில் ஒதுக்கப்பட்ட சுமார் ரூ.1.4 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது பல மடங்கு அதிகமாகும். துடிப்புமிக்க கிராமங்கள் திட்டம், எல்லைப் பகுதிகளில் சாலைகள், போக்குவரத்து, சுற்றுலா, வாழ்வாதாரம், அத்தியாவசிய சேவைகள் ஆகியவற்றின் மூலம் இக்கருத்துக்கு ஒரு முறைப்படுத்தப்பட்ட அர்த்தத்தை அளிக்கிறது.
வரலாற்று ரீதியாகப் பின்தங்கிய 112 மாவட்டங்களை நிரந்தர பின்தங்கியப் பகுதிகளாக இல்லாமல் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, வாழ்வாதாரங்களில் வளர்ச்சியை விரைவுபடுத்தக்கூடிய இலக்குகள், ஒருங்கிணைப்பு, போட்டி அடிப்படையிலான வளர்ச்சி முறை ஆகியவற்றை இத்திட்டம் அறிமுகம் செய்தது.
பிரதமரின் ஜன்மான் திட்டம், குறிப்பாக நலிவடைந்த 75 பழங்குடியினர் குழுக்கள் அனைத்தையும் உள்ளடக்கி அவர்களுக்கு தரமான வீடுகள், சாலைகள், குடிநீர், சுகாதாரம், இதர அடிப்படைத் தேவைகளை அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.
இதற்கு முன்பு புறக்கணிக்கப்பட்டிருந்த குடும்பங்களை 59 கோடிக்கும் அதிகமான மக்கள் வங்கிக் கணக்குகள் முறையான நிதி அமைப்புக்குள் சேர்த்துள்ளன. சவுபாக்யா திட்டம் 100% கிராமப்புற மின்மயமாக்கலுக்கு வழிவகுத்தது. இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டமான உஜ்வாலா திட்டம் 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குப் புகையில்லா சமையல் எரிவாயு வசதியை அளித்துள்ளது. ஜல் ஜீவன் இயக்கம் 13 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் வழிக் குடிநீர் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்ரா கடன்களில் 68 % மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பிரதமரின் சாலையோர வியாபாரிகள் மேம்பாட்டுத் திட்டப் பயனாளிகளில் 46 சதவீதம் பேர் மகளிர் ஆவர். லட்சாதிபதி சகோதரி திட்டம் கிராமப்புற மாற்றத்தின் மையப்புள்ளியாக மகளிரின் பொருளாதார அதிகாரமளித்தலை முன்னிலைப்படுத்துகிறது. முன்னேற்றதின் உண்மையான அளவுகோல் என்பது மேற்கூரை எந்த அளவு உயர்ந்துள்ளது என்பது கிடையாது.
மாறாக, அதன் கீழ் எத்தனை பேர் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்பதில்தான் உள்ளது. அதுவே, மோடி சகாப்தத்தின் வரைவுக் கொள்கையாகும். அதாவது, ஒரு காலத்தில் விளிம்பில் இருந்தவர்கள் நாட்டின் முதன்மைப் பகுதிக்குள் நுழைவதற்காக இனிமேல் காத்திருக்க வேண்டியதில்லை. அவர்களே அதை வரையறுக்கின்றனர்.

More Stories
மருத்துவரின் குறிப்பு இல்லாமல் விற்பதை கண்காணிக்க நாடு முழுவதும் மருந்து கடைகளில் சிசிடிவி கேமரா கட்டாயம்
பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலை திறப்பு
மோடிக்கு புதின், மெலோனி பிறந்தநாள் வாழ்த்து