March 18, 2026

ரமலான் மாதத்தில் ஏழைகளுக்கு கொடுக்கப்படும் ஜகாத், பித்ரா பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது: ஐயுஎம்எல் வேண்டுகோள்

சென்னை: ரமலான் மாதத்தில் ஏழைகளுக்கு ஜகாத், பித்ரா கொடுப்​ப​தற்​காக முஸ்​லிம்​கள் எடுத்​துச் செல்​லும் பணத்தை பறி​முதல் செய்​வதை தவிர்க்க வேண்​டும் என்று இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்சி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.

இது தொடர்​பாக தமிழக தலைமை தேர்​தல் அதி​காரிக்கு அக்​கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் கே.எம்​.​காதர் மொகிதீன் எழு​தி​யுள்ள கடிதம்: சட்​டப்​பேரவை தேர்​தல் தேதி அட்​ட​வணை வெளி​யிடப்​பட்​டதை தொடர்ந்​து, தமிழகத்​தில் தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​துள்​ளன.

பறக்​கும் படை அதி​காரி​கள் வாகன சோதனை நடத்​தி, ரூ.50 ஆயிரத்​துக்கு மேல் கொண்டு செல்​வோர் மீது நடவடிக்கை எடுத்து வரு​கின்​றனர். இதனால் சிறு வணி​கர்​கள், அப்​பாவி மக்​கள் பாதிக்​கப்​படு​கின்​றனர்.

தற்​போது ரமலான் மாதம் என்​ப​தால் முஸ்​லிம்​கள் அனை​வரும் தங்​கள் மார்க்க கடமை​யான ஜகாத், பித்ரா ஆகிய​வற்றை ஏழைகளுக்கு கொடுத்து வரு​கின்​றனர். குறிப்​பாக, ரமலானின் கடைசி 5 நாட்​களில் இதை வழக்​க​மாக கொண்​டுள்​ளனர்.

இப்​படி ஜகாத் கொடுப்​ப​தற்​காக எடுத்​துச் செல்​லும் பணத்தை பறி​முதல் செய்​வதை தவிர்க்க வேண்​டும் என்று அன்​புடன் வலி​யுறுத்​திக் கேட்​டுக் கொள்​கிறோம்.

இதுதொடர்​பாக பறக்​கும் படை அதி​காரி​களுக்கு உரிய அறி​வுறுத்​தல் வழங்க வேண்​டும். முஸ்​லிம்​கள் சார்​பில் வைக்​கப்​படும் இந்த கோரிக்​கையை பரிசீலனை செய்து நடை​முறைப்​படுத்​து​வீர்​கள் என்று உறு​தி​யாக நம்​பு​கிறோம் என்று தெரி​வித்​துள்​ளார்.

Spread the love