November 25, 2026

ரயில்வே. RAC டிக்கெட்டுக்கு ஆபத்து! 43 ஆண்டு முறையை ரத்து ?

ரயில்களில் இருவர் ஒரு படுக்கையைப் பகிர்ந்து பயணிக்கும் RAC முறையை ரத்து செய்வது குறித்து இந்திய ரயில்வே பரிசீலித்து வருகிறது. இந்த முறையில் பயணிக்க அனுமதி கிடைத்தாலும், முழு கட்டணம் செலுத்தி படுக்கையைப் பகிர்வது பயணிகளுக்கு சிரமம் எனப் புகார்கள் எழுந்துள்ளன.

உறுதி செய்யப்பட்ட பயணி வராவிட்டால் காலியான படுக்கையை அடுத்த நிலையிலிருந்து மற்றவருக்கு ஒதுக்க டிஜிட்டல் கண்காணிப்பு உதவுவதால், RAC முறையின் தேவை குறைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கருதுகின்றனர். RAC பயணிகளுக்கு முழுப் படுக்கை கிடைக்காவிட்டால் பகுதி கட்டணத்தைத் திருப்பித் தர நாடாளுமன்றக் குழுவும் பரிந்துரைத்துள்ளது. RAC முறையை ரத்து செய்வது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

Spread the love