அரக்கோணம் – திருத்தணி இடையே காலை 2, இரவு 2 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது .
பராமரிப்பு பணிகள் நடப்பதால் திருத்தணியில் இருந்து இரவு 9.15, 11.10 மணிக்கு புறப்படும் ரயிலும், அரக்கோணத்தில் இருந்து காலை 4, 5 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் இன்று (ஏப்.27) முதல் 21 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அரக்கோணம் – திருத்தணி இடையே ரயில் சேவை
அரக்கோணம் திருத்தணி இடையேயான ரயில் சேவை பொது மக்களுக்கு முக்கிய வழித்தடமாக செயல்பட்டு வருகிறது இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் தினசரிக்கு வேலைக்கு செல்லும் பயணிகள்,மாணவர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு மற்றும் திருத்தணியில் இருந்து அரக்கோணத்திற்கும் இரண்டு ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் சேவை மூலம் குறைந்த செலவில் மற்றும் விரைவாக பயணம் செய்ய முடிகிறது. குறிப்பாக கோவில் நகரமாக இருக்கும் திருத்தணிக்கு வரும் பக்தர்களுக்கும் இந்த ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த வழித்தடத்தில் ரயில்கள் வழக்கமாக நேர அட்டவனின் படி இயக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அரக்கோணம் திருத்தணி இடையே உள்ள வழிதடுத்தல் சில ரயில் நிறுத்தங்களும் உள்ளதால் சுற்றுப்புற கிராம மக்களும் இதனை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
காலை இரவு மின்சார ரயில் ரத்து
மொத்தத்தில் அரக்கோணம்- திருத்தணி இடையேயான ரயில் சேவை அந்த பகுதி போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் முக்கிய சேவையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரக்கோணம்- திருத்தணி இடையே காலை மற்றும் இரவு இரண்டு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் தற்போது பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக சில மின்சார ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
திருத்தணி ரயில் சேவை பராமரிப்பு வேலை
அதன்படி வரும் 27ஆம் தேதி (திங்கள்) முதல் மே 17ஆம் தேதி வரை மொத்தம் 21 நாட்களுக்கு இரண்டு முக்கிய மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அந்த ரயில்களில், அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4 மணி மற்றும் காலை 5 மணிக்கு புறப்பட்டு திருத்தணிக்கு செல்லும் ரயில்கள் இரண்டும் அந்த காலக்கட்டத்தில் இயக்கப்படாது.
அதேபோல், திருத்தணியில் இருந்து அரக்கோணம் நோக்கி இரவு 9.15 மணி மற்றும் 11.10 மணிக்கு புறப்படும் இரண்டு மின்சார ரயில்களும் ஏப்ரல் 27 முதல் மே 16 வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில சேவைகளில் பகுதி ரத்தும் செய்யப்பட்டுள்ளது. மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸிலிருந்து தினமும் பிற்பகல் 11 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில், இந்த காலக்கட்டத்தில் திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருத்தணியில் இருந்து பிற்பகல் 12.35 மணிக்கு புறப்படும் ரயில், திருவாலங்காட்டிலிருந்து மட்டுமே இயக்கப்பட்டு மூர்மார்க்கெட் வரை செல்லும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.மேலும் இரவு 11.55 மணிக்கு மூர்மார்க்கெட்டிலிருந்து புறப்படும் ரயிலும் அரக்கோணம் வரை செல்லாமல் திருவாலங்காடு நிலையத்தில் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More Stories
விஜய் வேட்பு மனு சர்ச்சை.. வருமானவரித்துறை விசாரணை நடத்த வேண்டும்- நீதிமன்றத்தில் புதிய வழக்கு!
ரயில்களில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பெட்டிகளில் பயணிக்க சலுகை
குழந்தைகளிடம் வாக்கு கேட்ட விஜய் மீது கோவை காவல் ஆணையரிடம் புகார்