கோடை விடுமுறையை ஒட்டி கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இது குறித்து இந்த பதிவில் பெரிதாக பார்க்கலாம்.
கோடை விடுமுறை தற்பொழுது தொடங்கியுள்ளது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக கொடைக்கானல் இருந்து வருகிறது .இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி தாண்டி கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் குளிர்ச்சியான இடங்களை தேடி கொடைக்கானலுக்கு பெரும் அளவில் வருகின்றனர்.
தொடங்கிய கோடை விடுமுறை
மேலும் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிந்த நிலையில் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறையை குடும்பத்தினர் உடன் மகிழ்ச்சியாக கழிக்கவும், இயற்கையின் அமைதியை அனுபவிக்கவும் பலரும் கொடைக்கானல் மலைப்பகுதியை தேர்வு செய்து வருகின்றன, குறிப்பாக கொடைக்கானலில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைபிள் மரக்காடுகள், போயர் சதுரங்கம் போன்ற பிரபலமான இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கோடை சுற்றுலா இடங்கள் பிரபலமானவை
அங்கு நிலவும் குளிர்ச்சியான காலநிலை பசுமையான மரங்கள் மேகமூட்டமான சூழல் ஆகியவை மக்கள் அதிகம் கவர்ந்து வருகிறது. பலரும் இயற்கை காட்சிகளை ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் உள்ள பிராயண்ட் பூங்காவிலும், பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அங்கு பசுமை புல்வெளிகளில் அமர்ந்து குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் சுற்றுலா பயணிகள் மலர்ந்துள்ள பல்வேறு வகையான பூக்களை பார்த்து ரசிக்கின்றனர்.
தர்மபுரியில் சௌமியா அன்புமணி!விஜய்கட்சியால் நெருக்கடி?
கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்
அதேபோல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வதும் ஏரியை சுற்றியுள்ள சாலைகளில் குதிரை மற்றும் சைக்கிள் சபாரி செய்வதும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய ரிலாக்ஸ் ஆக உள்ளது. தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் பாம்பர் புரம், அப்சர்வேட்டரி, பசுமை பள்ளத்தாக்கு சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் வரை வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது .வாகனங்கள் மெதுவாக நகர்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி பேராலயம் பக்தர்கள் கூட்டம்
இதற்கு இடையே நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். மேலும், கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள கடற்கரையில் குடும்பத்தினருடன் வந்து அவர்கள் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கின்றனர். அதேபோல் உடுமலை அருகில் உள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருகிலும் சுற்றுலாப் பயணிகள் குளிர்ந்த நீரில் குளித்து மகிழ்ந்தனர்.
சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம்
இதனைத் தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணிலும் ஈரோடு சேலம் திருப்பூர் கோவை பகுதிகளில் இருந்து வந்த மக்கள் அருவி போல கொட்டும் நேரில் உற்சாகமாக குளித்து விடுமுறையை அனுபவித்தனர்.தொடர்ந்து தமிழகத்தின் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்க கூடும் என்பதால் கொடைக்கானல் மற்றும் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .இதனால் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More Stories
மே 9-ம் தேதி பிரதமர் மோடி ஹைதராபாத் வருகை
92 சதவீத வாக்குப் பதிவுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு
இந்து கடவுள்களை அவமதிப்பதா? – பிரகாஷ்ராஜ் மீது ரூ.100 கோடிக்கு மான நஷ்டஈடு வழக்கு