ராமநாதபுரம் மாவட்டத்தில் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி) மற்றும் குழாய் வழி இயற்கை எரிவாயு (பி.என்.ஜி) விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக THINK Gas நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களை முன்னிட்டு இந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது எரிவாயு விநியோகத்தில் எந்தத் தடையும் இல்லை என்றும், விலை மாற்றமின்றி சேவைகள் வழக்கம்போல வழங்கப்பட்டு வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. வீட்டு சமையல் தேவைகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் போக்குவரத்து துறைகளுக்கான எரிவாயு விநியோகம் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதுகுறித்து நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் வணிகத் துறை தலைமை அதிகாரி வினுகுமார் பாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது: உலகளவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்திய அரசு இயற்கை எரிவாயு வழங்கலை ஒழுங்குபடுத்தும் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் வீட்டு பயன்பாட்டிற்கான குழாய் வழி எரிவாயு மற்றும் போக்குவரத்திற்கான சி.என்.ஜி விநியோகம் முன்னுரிமையுடன் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார். ராமநாதபுரம் பகுதியில் உள்ள சி.என்.ஜி நிரப்பும் நிலையங்களும் குழாய் வழி எரிவாயு சேவைகளும் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் எந்த அச்சமும் இல்லாமல் சேவைகளை பயன்படுத்தலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது குழாய் வழி இயற்கை எரிவாயுவின் விலை ஒரு எஸ்.சி.எம் அளவிற்கு ரூ.47 என்றும், சி.என்.ஜி எரிவாயுவின் விலை ஒரு எஸ்.சி.எம் அளவிற்கு ரூ.84.25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More Stories
உடன்குடியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை,ரெக்கம் ரூ 25 ஆயிரம் கொள்ளை:- மர்ம நபர்கள் கைவரிசை!
திருச்செந்தூர் .மார்.13
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சு.கணபதி தலைமையில் நடைபெற்றது.