ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் வறட்சி மற்றும் பருவமழை மாற்றத்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருவதாகவும், வங்கி ஊழியர்கள் நிலத்தை ஜப்தி செய்வோம் என மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கூட்டுறவு பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் மற்றும் வசூல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்துக்குப் பின் கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

More Stories
ரெட்டியார்சத்திரத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கணவன் – மனைவி உட்பட 3 பேர் கைது, 56 கிலோ கஞ்சா பறிமுதல் – எஸ்.பி. அதிரடி நடவடிக்கை
சாயல்குடி ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு புகார் – மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு செய்ய கோரிக்கை
கீழமுந்தலில் சட்டவிரோத மது விற்பனை செய்வதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு