September 3, 2026

ராமநாதபுரம் மாவட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கனிராஜபுரம், சாயல்குடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பனை மரங்களை பாதுகாத்து, பனை சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், கீழக்கரை பகுதியில் கழிவுநீர் கடலில் கலப்பதை தடுத்து, கடல் சுற்றுச்சூழல் மற்றும் மீன்வளத்தை பாதுகாக்கவும், சட்டவிரோத மது விற்பனை மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில் சூர சங்கர், ரத்தினம், ராமேஸ்வரம் கவுன்சிலர் சங்கர், வீரபாகு, முருகேசன், முருகன், ராஜா, மணிகண்டன், ரங்கன், வேலு, நாகராஜன், தாயம்மாள், வினோத், கண்ணன், கார்த்திக், விமல், சக்தி உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Spread the love