May 22, 2026

வாணியம்பாடி அஇஅதிமுக மாவட்ட அலுவலகத்தில் புதிய மாவட்ட செயலாளர் டாக்டர் பசுபதி தலைமையில் ஆலோசனை கூட்டம்.

வாணியம்பாடி:22

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் டாக்டர் பசுபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக கழக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்து புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்து அறிக்கை விட்டார் அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் கே சி.வீரமணி நீக்கி புதிய மாவட்ட செயலாளராக டாக்டர் பசுபதி நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர்.பசுபதி முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கட்சி அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட செயலாளர் டாக்டர் பசுபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பேரூர் கழக செயலாளர்கள் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர் கள் மற்றும் நகர செயலாளர் பல்வேறு அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி. சம்பத்குமார், வாணியம்பாடி நகர செயலாளர் சதாசிவம், ஆம்பூர் நகர செயலாளர் மதியழகன், திருப்பத்தூர்  ஜோலார்பேட்டை பேரூர் நகர ஒன்றிய செயலாளர்கள் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Spread the love