June 5, 2026

வார கடைசி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 885 பேருந்துகள் இயக்கம்

போக்குவரத்து துறை தகவல்

சென்னை: ​வார கடைசி நாட்​களை முன்​னிட்​டு, சென்​னை​யில் இருந்து இன்​றும், நாளை​யும் 885 பேருந்துகள் இயக்​கப்​படும் என, போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்ளது.

இதுகுறித்​து, அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: முகூர்த்த தின​மான இன்று (4-ம் தேதி) மற்​றும் வார கடைசி நாட்​களை முன்​னிட்டு (5, 6, 7 தேதி​கள்) சென்​னையி​லிருந்து இதர இடங்​களுக்​கும் மற்​றும் பிற இடங்​களி​லிருந்​தும் கூடு​தலான பயணி​கள் தமிழகம் முழு​வதும் பயணம் மேற்​கொள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதை கருத்​தில் கொண்​டு, தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​கள் தினசரி இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன், கூடு​தலாக சிறப்பு பேருந்​துகளை இயக்க திட்​ட​மிட்​டுள்​ளது.

சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு இன்று 295 பேருந்​துகளும், நாளை 480 பேருந்​துகளும் மற்​றும் 6-ம் தேதி சனிக்​கிழமை 495 பேருந்​துகளும், சென்னை கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர், பெங்​களூரு ஆகிய இடங்​களுக்கு ஜுன் 4, 5, 6 ஆகிய தேதி​களில் 55 பேருந்துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மாதவரத்​திலிருந்து நாளை மற்​றும் நாளை மறு​நாள் 25 பேருந்​துகளும் மற்​றும் பெங்​களூரு, திருப்​பூர், ஈரோடு மற்​றும் கோயம்​புத்​தூர் ஆகிய இடங்​களி​லிருந்து பல்​வேறு இடங்​களுக்கு 200 சிறப்பு பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், இன்று 4,097 பயணி​களும், நாளை 8,541 பயணி​களும், சனிக்​கிழமை அன்று 4,972 பயணி​களும், மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை அன்று 10,079 பயணி​களும் பயணம் மேற்​கொள்ள முன்​ப​திவு செய்​துள்​ளனர். இவ்​வாறு செய்​திக் குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Spread the love