September 15, 2026

விநாயகப் பெருமான் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேற முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை: நாடு முழுவதும் இன்று (செப்.14) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விநாயகப் பெருமான் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேறட்டும் என்று முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆலயங்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பொது இடங்களில் பந்தல்களில் வைக்கப்பட்டுள் பல்வேறு விநாயகர் சிலைகள், வீடுகளில் வைக்கப்பட்டுள்ள களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் என மக்கள் வழிபட்டு வருகின்றனர். பூக்கள், பழங்கள், கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்டவற்றை விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து மக்கள் வழிபடுகின்றனர்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்தினை முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் கூறியதாவது: “விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்.

மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Spread the love