விஜய்யின் ஜோதிடரான ரதன் பண்டிட் இன்று முதல் ஆளாக தவெக தலைவரின் வீட்டிற்கு வந்துவிட்டார். பூங்கொத்து மற்றும் சால்வையுடன் அவர் வந்ததை பார்த்த விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.
முக்கிய அம்சங்கள்:
- இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள்
- விஜய் கட்சி முன்னிலை
- பூங்கொத்துடன் வந்த ரதன் பண்டிட்
தவெக லீடிங்: தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி பல்வேறு இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தபால் வாக்குகள் எப்பொழுதும் திமுகவுக்கு சாதமாக இருக்கும் நிலையில் இம்முறை அது எப்படி தவறியது என மக்கள் வியக்கிறார்கள்.
M. Tech in Data Science & AI – For Working Pros | BangalorePES University
இந்நிலையில் காலையிலேயே ஒரு பூங்கொத்தையும், சால்வையையும் வாங்கிக் கொண்டு விஜய் வீட்டிற்கு வந்துவிட்டார் அவரின் ஜோதிடர் ரதன் பண்டிட். வெற்றி நமக்கு தான் அதனாலயே ஜோதிடர் காலையில் வந்திருக்கிறார் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள் . இதற்கிடையே திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று மகனுக்ககாவும், தவெகவுக்காகவும் பிரார்த்தனை செய்திருக்கிறார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர்.
ஜோதிடம்: தற்போது தவெக முன்னிலையில் இருப்பதை பார்த்து விஜய்யை விட அவரின் அப்பா தான் ரொம்ப சந்தோஷத்தில் இருப்பார். இந்நிலையில் ரதன் பண்டிட்டை விஜய் வீட்டு வாசலில் பார்த்தவர்களோ, தவெக தலைவர் போய் ஜோதிடத்தை இந்த அளவுக்கு நம்புவார் என எதிர்பார்க்கவில்லை. உழைப்பை நம்பி முன்னுக்கு வந்த மனிதர் அரசியலுக்கு வந்ததும் ஜோதிடம் பக்கம் சென்றுவிட்டாரே. ரதன் பண்டிட் இல்லாமல் எங்கும் செல்ல மாட்டார் போன்று என விமர்சிக்கிறார்கள்.
கடந்த வாரம் எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தவர் ரதன் பண்டிட் தான். விஜய் கட்சி துவங்கும் முன்பே அவர் கணித்த விஷயம் பற்றி விவாதிக்கப்பட்டதால் ரதன் பண்டிட் டிரெண்டானார். அதாவது விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்றும், அவரால் தலைமை நிலைக்கு வர முடியாது என்றும் 2019ம் ஆண்டில் கணித்தார் ரதன் பண்டிட்.
அதை சுட்டிக்காட்டி விஜய்யால் ஆட்சிக்கு வர முடியாது என விமர்சித்தார்கள். மேலும் விஜய் தன் மீது நம்பிக்கை இல்லாத ஒருவரை எப்படி ஜோதிடராக வைத்திருக்கிறார் என்று கேள்வி கேட்டார்கள் சமூக வலைதளவாசிகள். அதை பார்த்த விஜய் ரசிகர்களோ, எங்க அண்ணன் தான் அடுத்த முதல்வர் என்பது உறுதியாகிவிட்டதால் பயத்தில் கதறுகிறார்கள். நல்லா கதறுங்கள். ரதன் பண்டிட்டை குறை சொல்லி விஜய்ணாவை மட்டம் தட்ட முடியாது என்றார்கள்.
முதல்வர் அஜித்: ரதன் பண்டிட் விஜய் பற்றி மட்டும் அல்ல அஜித் குமார் பற்றியும் ஜாதகத்தை வைத்து கணித்திருந்தார். இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வர்களின் ஜாதகத்தை விட அஜித் குமார் ஜாதகம் சிறப்பாக இருக்கிறது. அவர் அரசியலுக்கு வர விரும்ப மாட்டார். ஆனால் வந்தால் நிச்சயம் முதல்வர் ஆகும் யோகம் அஜித்துக்கு இருக்கிறது என்று கணித்தார் ரதன் பண்டிட்.
இதற்கிடையே விஜய்ணா முதல்வராகிய பிறகு போடும் முதல் கையெழுத்து ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்யத் தான். டைட்டில் கார்டில் தளபதி விஜய் அல்ல மாறாக முதல்வர் விஜய் என்று இருக்கும் என ஏற்கனவே மாதிரி டைட்டில் கார்டை உருவாக்கிவிட்டார்கள் ரசிகர்கள்.
புதுச்சேரி 2026 தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்.. முன்னிலை வகிக்கும் என்டிஏ கூட்டணிஜனநாயகன் ஓடிடி வியாபாரம்: ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமத்தை ரூ. 120 கோடிக்கு வாங்கிய அமேசான் பிரைம் ரத்து செய்ததை அடுத்து அதை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்க முயற்சி நடந்து வருகிறது. ஆனால் அவர்களோ ரூ. 50 கோடிக்கு தான் வாங்குவோம் என்கிறார்களாம். ஜனநாயகன் படம் ஆன்லைனில் கசியவே அதன் வியாபாராம் பாதிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்இந்நிலையில் ஜனநாயகன் கசிவை மனதில் வைத்து தான் வாங்கிய ரூ. 220 கோடி சம்பளத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார் விஜய் என்று நேற்றில் இருந்து பேசப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வரவில்லை.

More Stories
தொடர்ந்து முன்னிலையை நோக்கி தவெக.. விஜய் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு!
கேரளாவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது காங்கிரஸ் கூட்டணி | தேர்தல் முடிவுகள் 2026
தவெக வேட்பாளர்களுக்கு ரகசிய கண்காணிப்பு.. கட்சி தாவலை தடுக்க .. விஜய் அதிரடி நடவடிக்கை!