March 12, 2026

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: இந்தியா மாற்று வழிகளில் 40 நாடுகளிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி!

புதுடெல்லி: ஈ​ரா​னால் ஹார்​முஸ் ஜலசந்தி முடக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் இந்​தியா தனது எரிசக்தி பாது​காப்பை வலுப்​படுத்​தும் நோக்​கில் 40 நாடு​களி​லிருந்து கச்சா எண்​ணெயை வாங்​கத் தொடங்கி​யுள்​ளது.

மேலும் எண்​ணெய் இறக்​கும​தி​யில் சுமார் 75% தற்​போது மாற்று வழித்​தடங்​கள் மூலம் வரு​வ​தாக மத்​திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்​கின்​றன.

பாரசீக வளை​கு​டாவுக்​கும் ஓமன் வளை​கு​டாவுக்​கும் இடையிலான குறுகிய கப்​பல் பாதை​யான ஹார்​முஸ் ஜலசந்​தி, உலகளா​விய எரிபொருள் விநி​யோகத்​திற்கு மிக​வும் முக்கியமானது. உலகளா​விய எண்​ணெய் மற்​றும் இயற்கை எரிவா​யு​வில் குறைந்​தது 5-ல் ஒரு பங்கு இதன் வழி​யாக கொண்டு செல்​லப்​படு​கிறது. இந்​நிலை​யில் அமெரிக் தாக்​குதலை தொடர்ந்து இந்த ஜலசந்​தியை ஈரான் முடக்​கி​யுள்​ளது.

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக எண்​ணெய் விநி​யோகம் மீண்​டும் தொடங்​கு​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் தற்​போதைக்கு இல்லை என கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் பிற வழிகள் மூல​மாக மேற்கொள்​ளப்​படும் கொள்​முதலை மத்​திய அரசு 55 சதவீதத்​தில் இருந்து 75 சதவீத​மாக உயர்த்​தி​யுள்​ள​தாக​வும் தடையற்ற எரி சக்தி விநி​யோகத்தை உறு​தி​செய்​திட அதி​காரி​கள் பல நாடுகளுடன் தொடர்ந்து தொடர்​பில் உள்​ள​தாக​வும் அந்த வட்டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

மத்​திய அரசு தரவு​களின்​படி அல்​ஜீரி​யா, அங்​கோலா, அர்ஜென்டினா, ஆஸ்​திரேலி​யா, பெல்​ஜி​யம், பிரேசில், புரூனே, கனடா, கொலம்​பி​யா, எகிப்​து, கிரீஸ், ஈராக், இஸ்​ரேல், தென் கொரியா, குவைத், லிபி​யா, மலேசி​யா, மெக்​ஸிகோ, நெதர்லாந்து, நைஜீரி​யா, நார்​வே, ஓமன், பனா​மா, கத்​தார், சவுதி அரேபி​யா, துருக்கி, ஐக்​கிய அரபு அமீரகம், இங்​கிலாந்​து, அமெரிக்​கா, வெனிசுலா உள்​ளிட்ட 40 நாடு​களி​ல் இருந்து எண்ணெய் மற்​றும் எரிசக்தி வளங்களை இந்​தியா இறக்​குமதி செய்​கிறது.

ரஷ்​யா​வில் இருந்​தும் இந்​தியா தனது கொள்​முதலை தொடர்கிறது. நாட்​டின் முதன்மை சப்​ளை​ய​ராக ரஷ்யா இருந்து வரு​கிறது. “கடந்த மாதம் தின​மும் 0.04 மில்​லியன் பீப்​பாய்​கள் வாங்​கப்​பட்​டன. இது நமது விநி​யோகத்​தில் கிட்​டத்​தட்ட 20 சதவீதம்” என்று மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

பெட்​ரோலி​யத் ​துறை இணை​யமைச்​சர் சுரேஷ் கோபி கடந்த திங்கட்​கிழமை மாநிலங்​களவை​யில் கூறுகை​யில், “மத்​திய அரசு 5.33 மில்​லியன் மெட்​ரிக் டன் பெட்​ரோலிய பொருட்​களுக்​கான இருப்பு வசதி​களை நிறு​வி​யுள்​ளது. இது சுமார் 9.5 நாட்​களுக்​கான கச்சா எண்​ணெய் தேவையை பூர்த்தி செய்​யும். கூடு​தலாக, 64.5 நாட்களுக்கு கச்சா எண்​ணெய், பெட்​ரோலிய பொருட்​களுக்​கான சேமிப்பு வசதி​களை எண்​ணெய்​ நிறு​வனங்​கள்​ கொண்​டுள்​ளன” என்றார்​.

Spread the love