September 26, 2026

ஹைதராபாத்தில் உற்சாகமாக விநாயகர் சிலைகள் ஊர்வலம்: ரூ.39 லட்சம் ஏலம் போன லட்டு பிரசாதம்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்​கான விநாயகர் சிலைகள் ஊர்​வல​மாக கொண்டு செல்லப்பட்டு பலத்த பாது​காப்​புடன் நீர்​நிலைகளில் கரைக்கப்பட்டன. இதில் பாலாப்பூர் விநாயகர் சிலை​யின் கையில் வைக்​கப்​பட்​டிருந்த மகா லட்டு பிர​சாதம் இந்த ஆண்டு ரூ.39 லட்​சத்​திற்கு ஏலம் எடுக்​கப்​பட்​டது.

கடந்த 14-ம் தேதி நாடு முழு​வதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்​டாடப்​பட்​டது. இதனை தொடர்ந்து 12வது நாளான நேற்று ஹைத​ரா​பாத்​தில் அனைத்து விநாயகர் சிலைகளை​யும் மிக​வும் பாது​காப்​பாக ஊர்​வல​மாக கொண்டு சென்று பல நீர் நிலைகளில் கரைத்​தனர். ஹைத​ரா​பாத்​தில் 69 அடி​யில் அமைந்த மகா கணபதி​யின் ஊர்​வலத்​தில் ஏராள​மான பக்​தர்​கள் கலந்து கொண்டனர்.

இந்த விநாயகரை நேற்று மதி​யம் 2.15 மணிக்கு நெக்​லஸ் ரோடு பகு​தி​யில் உள்ள உசேன் சாகரில் கரைத்​தனர். அடுத்​த​படி​யாக பாலாப்​பூர் விநாயகர் உட்பட ஆயிரக்​கணக்​கான விநாயகர் சிலைகள் ஊர்​வல​மாக கொண்டு சென்று 36 நீர்​நிலைகளில் கரைக்​கப்​பட்​டன. காலை 7 மணி முதல் நேற்று நள்​ளிரவு வரை விநாயகர் சிலைகள் ஊர்​வல​மாக கொண்டு வரப்​பட்டு கிரேன்களின் உதவி​யால் நீர் நிலைகளில் கரைக்​கப்​பட்​டன. சுமார் 10 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​களில் ஈடுபட்டிருந்தனர்.

ஒவ்​வொரு ஆண்​டும் ஹைத​ரா​பாத் பாலாப்​பூர் விநாயகரை பக்தர்​கள் பிரத்​யேக​மாக வழிபட்டு வரு​கின்​றனர். கடந்த 45 ஆண்டு​களாக பாலாப்​பூரில் விநாயகர் சதுர்த்​திக்கு மாபெரும் பந்தலிட்டு விநாயகர் சிலை அமைக்​கப்​படு​கிறது. அப்​போது விநாயகரின் கையில் லட்டு பிர​சாதம் வைக்​கப்​படு​கிறது. 9 அல்லது 11வது நாள் விநாயகர் சிலை ஊர்​வலத்​திற்கு முன்​ன​தாக அந்த லட்டு ஏலம் போடப்​படு​கிறது.

முதன் முதலாக இந்த லட்டு பிர​சாதம் ரூ.450க்கு ஏலம் போனது. இந்த ஆண்​டு, பாதாம், பிஸ்​தா, முந்​திரி என சிறப்​பாக தயாரிக்கப்பட்​ட லட்டு நேற்று ரூ. 39 லட்​சத்​துக்கு ஏலம் போனது. இந்த முறைலட்டு பிர​சாதத்தை சாஹிப் நகரை சேர்ந்த பிரணீத் ரெட்டி என்​பவர் ஏலம்​ எடுத்​தார்.​ கடந்த ஆண்டு இந்த லட்டு ரூ.35 லட்​சத்​துக்கு ஏலம் போனது குறிப்​பிடத்​தக்​கது.

Spread the love