புதுடெல்லி: 200 டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுடன், இந்திய அணி மோதியது.
இதில் பங்கேற்ற ஹர்மன்பிரீத் கவுர், 200 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். ஆடவர் கிரிக்கெட்டில் கூட யாரும் இதுவரை 200 டி20 போட்டிகளில் விளையாடியது கிடையாது. இந்த சாதனையைச் செய்திருக்கும் முதல் வீராங்கனை இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
செயின்ட் லூயிஸ் கிளப் செஸ் போட்டி – பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா
சிராஜின் மறக்க முடியாத ‘பவுல்டு’ – ஓவலில் இங்கிலாந்தின் இதயம் நொறுங்கிய இந்திய வெற்றி!
CWG 2026: மூட்டுவலியை வென்று பதக்கம் வென்ற சீமா