அதிபர் ட்ரம்பின் எச்சரிக்கைத் தொடர்ந்து, ஈரான் – அமெரிக்காவின் 14 அம்ச தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இந்த மோதலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கத்தார் மற்றும் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததன் பேரில் 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்கா, ஈரானால் கையெழுத்திடப்பட்டது. தொடர்ந்து, இதுதொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் தொடங்கின. இதற்கிடையே, லெபனான் – இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் தாக்குதல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை உறுதி செய்யத் தவறியதற்காக அமெரிக்காவை ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதிலும், மோதல்கள் தொடர்வதால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், ஈரான் – அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் எச்சரிக்கையும் இந்தப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டையைப் போட்டுள்ளது.

“ஹார்முஸ் நீரிணையை மூடினால் உங்கள் நாடே இருக்காது; ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தைச் சீர்குலைக்கும் வேலையைச் செய்யக்கூடாது. கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்; தேவைப்பட்டால், ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா கைப்பற்றும்” என எச்சரித்துள்ளார்.

More Stories
8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்திய தேசியக் கொடியுடன் ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 கப்பல்கள்
காங்கோவில் மிகவும் ஆபத்தான வைரஸ்.. தொடரும் உயிரிழப்புகள்.. அவசரநிலை அறிவித்த ஐ.நா.!
”கொஞ்சம் யோசித்துப் பாருங்க..” இஸ்ரேலிடம் பேசிய ட்ரம்ப்.. முடிவுக்கு வந்த லெபனானின் போர் நிறுத்தம்!