February 28, 2026

2026 டி20 உலகக் கோப்பையில் முதல்முறை… உலக சாதனை படைத்த வில் ஜாக்ஸ்!

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் வில் ஜாக்ஸ் நிகழ்த்திய சாதனை குறித்து…

News image

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் சாதனையை சமன்செய்துள்ளார்.

நடப்பு டி20 உலகக் கோப்பையில், வில் ஜாக்ஸ் மட்டுமே நான்கு முறை ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.

முதலில் பேட்டிங் செயத நியூசிலாந்து 20 ஓவர்களில் 159/7 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 161/6 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் (27 வயது) பந்துவீச்சில் 2 விக்கெட்டுகள், பேட்டிங்கில் 32 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த அபாரமான ஆல்ரவுண்ட் செயல்பாடுகளால் வில் ஜாக்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

ஏற்கெனவே, வில் ஜாக்ஸ் இந்த உலகக் கோப்பையில், நேபாளம், இத்தாலி, இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார்.

ஒரே எடிஷன் டி20 உலகக் கோப்பையில் அதிக ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள்

1. ஷேன் வாட்சன் – 4 முறை ( 2012 உலகக் கோப்பை)Advertise with us

2. வில் ஜாக்ஸ் – 4 முறை (2026 உலகக் கோப்பை)

3. சிக்கந்தர் ராஸா – 3 முறை (2022 உலகக் கோப்பை)

இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறியிருந்த நிலையில், நியூசிலாந்தின் வாய்ப்பு தடுத்து நிறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் நியூசிலாந்து அணி தேர்வாகுமென்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love