Apophis என்ற சிறுகோள் 2029ம் ஆண்டு ஏப்.13ம் தேதி 32,000 கி.மீ. அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வந்து, கடந்து செல்ல உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
சுமார் 20 மில்லியன் டன் எடைகொண்ட இந்த சிறுகோள் God of Chaos என்றும் அழைக்கப்படுகிறது. வெறும் கண்களால் பார்க்கக்கூடிய அளவுக்கு அருகில் வரும் என்பதால் மிகவும் அரிதான நிகழ்வாக கருதப்படுகிறது.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அபோபிஸ் விண்கல் எப்படி உருவானது?
அபோபிஸ் (Apophis) என்பது சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சூரியக் குடும்பம் உருவான காலத்திலிருந்து தோன்றிய ஒரு விண்கல். இது முதலில் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையில் உள்ள வளையங்களில் உள்ள துகள்கள் மூலம் உருவானது. ஆனால் பல மில்லியன் ஆண்டுகளாக வியாழன் மற்றும் மற்ற பெரிய கோள்களின் ஈர்ப்பு விசை காரணமாக அதன் சுற்றுப்பாதை மாறியுள்ளது.அபோபிஸ் Aten வகை விண்கலாக வகைப்படுத்தப்படுகிறது. இதன் சுற்றுப்பாதை 1 அஸ்ட்ரானமிக்கல் யூனிட்டிற்கும் AU – பூமி மற்றும் சூரியன் இடையிலான சராசரி தூரம் குறைவானது .மேலும் இது பூமியின் சுற்றுப்பாதையை கடக்கிறது.Apophis என்ற பெயர் பழமையான எகிப்திய கதைகளில் வரும் Apep என்ற பாம்பின் கிரேக்கப் பெயராகும்.
வானியலாளர்கள் ராய் டக்கர் கண்டுபிடித்தார்

2004 ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று அரிசோனா மாநிலத்தில் உள்ள Kitt Peak National Observatory-யில் வானியலாளர்கள் ராய் டக்கர், டேவிட் தோலன், மற்றும் ஃபப்ரிசியோ பெர்னார்டி ஆகியோர் அபோபிஸை கண்டுபிடித்தனர்.கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அபோபிஸ் சில காலம் பூமிக்கு ஆபத்தானதாக கருதப்பட்டது. 2029 ஆம் ஆண்டில் இது பூமியை மோதும் வாய்ப்பு 2.7 சதவீதம் என கணிக்கப்பட்டது.அதாவது, பிரான்சில் உள்ள ஈபில் டவரை விட பலமடங்கு பெரியது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ரேடார் மூலம் எடுத்த படங்களைப் பார்த்தால், இந்த விண்கல் “நிலக்கடலை” மாதிரி இரண்டு பக்கமும் பெரிதாக இருக்கும் வடிவத்தில் இருக்கிறது. இது ஒரே ஒரு கல் இல்லாமல்இரண்டு விண்கற்கள் ஒன்று சேர்ந்து உருவானதா இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள்.
இந்த விண்கல் எப்போது பூமியை நோக்கி வரும்??

இந்த விண்கல் 2029 ஏப்ரல் 13ஆம் தேதி பூமிக்கு மிகவும் அருகில் வரப் போகிறது. சுமார் 32,000 கிலோமீட்டர் தூரத்திலேயே இது பூமியைத் தாண்டி செல்லும். நம்ம GPS டிவி சிக்னல் கொடுக்கும் செயற்கைக்கோள்கள் இருக்கும் உயரம் கூட இதைவிட அதிகம் .சுமார் 35,786 கி.மீ பெரியது.அதாவது அவற்றை விட கீழே வந்தே இது கடந்து போகும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் இது சிறப்பு கவனம் பெறுகிறது. இவ்வளவு அருகில் வருவதால் பெரிய டெலஸ்கோப் இல்லாமலே குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்தே இதை வெறும் கண்ணாலே பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மேலும் இது வானத்தில் மிக வேகமாக நகரும். ஒரு மணி நேரத்தில் சுமார் 42 டிகிரி வரை நகரும்.
பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை

நம்ம கை நீட்டி விரல்களை மடக்கி பார்க்கும் அளவைக் காட்டிலும் சுமார் 4 மடங்கு வேகத்தில் இது நகர்வதை நாமே நேரில் கவனிக்கலாம்.ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா போன்ற பகுதிகளில் இது மிகவும் தெளிவாக தெரியும்.2004-ல் முதலில் இது கண்டுபிடிக்கப்பட்ட போது, பூமியை மோத வாய்ப்பு இருக்கலாம் என்று பயம் இருந்தது. ஆனா ல் 2021-ல் செய்யப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகு அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று விஞ்ஞானிகள் உறுதியாக சொல்கிறார்கள்.ஆனால் பூமியை மோதாது என்றாலும், பூமியின் ஈர்ப்பு விசை இதை பாதிக்கலாம். இதனால் அந்த விண்கல்லின் சுழற்சி வேகம் மாறலாம். அல்லது அதன் மேற்பரப்பில் சிறிய நிலச்சரிவுகள் கூட ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

More Stories
The man who saved thousands of people from HIV