கிவ்: ரஷ்ய ஏவுகணைகளை வீழ்த்த பிரேயா என்ற பெயரில் புதிய கேடயத்தை உருவாக்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது. உக்ரைன் -ரஷ்யா போர் 5 ஆண்டுகளை கடந்தும் முடிவின்றி நீடிக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில், இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே அண்மையில் 30 ஆயிரம் வடகொரிய ராணுவ வீரர்களை ரஷ்யா தனது நாட்டுக்குள் அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில் ரஷ்ய ஏவுகணைகளை வீழ்த்த பிரேயா என்ற பெயரில் புதிய கேடயத்தை உருவாக்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது. புதிய பிரேயா கேடயத்தை 2027-ம் ஆண்டுக்குள் தயாரிக்க உக்ரைன் முடிவு செய்துள்ளது. பிரேயா கேடயத்தை தயாரிக்க உக்ரைனுடன் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 10 ஐரோப்பிய நாடுகள் கைகோர்த்துள்ளன.

More Stories
Itel Zeno 100 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
Kimi K3 சாட்பாட்டின் கட்டண சந்தாவை நிறுத்திய Moonshot AI: பின்னணி என்ன?
ஜூலை 18-ம் தேதி, 46 ஆண்டுகள் இடைவெளி: விக்ரம்-1 ராக்கெட் விண்ணில் பாய்ந்ததில் அப்துல் கலாமின் தொடர்பு