September 7, 2026

2029-ல் போதையில்லாத இந்தியா உருவாகும்: அமித் ஷா உறுதி

பனாஜி: வரும் 2029-ம் ஆண்​டில் போதையில்லாத இந்தியா உருவாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்​துள்​ளார்.

கோவா​வின் பனாஜி நகரில் அவர் நேற்று நிருபர்​களிடம் கூறியதாவது: வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உரு​வாக்க பிரதமர் நரேந்​திர மோடி இலக்கு நிர்ணயித்​துள்​ளார். இதற்கு போதை​யில்​லாத இந்​தியா உருவாவது அவசி​ய​மாகும்.

பிரதமர் நரேந்​திர மோடி​யின் வழி​காட்​டு​தல்​களால் நாடு முழுவதும் நக்​சல் தீவிர​வாதத்தை வெற்​றிகர​மாக ஒழித்துள்ளோம். குறிப்​பாக காஷ்மீரில் தீவிர​வாதம் ஒடுக்​கப்​பட்டு உள்​ளது. வடகிழக்கு மாநிலங்​களில் இடது​சாரி தீவிர​வாதம் ஒழிக்கப்​பட்டு உள்​ளது. பல்​வேறு மாநிலங்​களில் நக்​சல், மாவோயிஸ்ட் தீவிர​வாதம் ஒழிக்​கப்​பட்டு இருக்​கிறது.

திருப்​பதி முதல் பசுபதி வரையி​லான மாவோ​யிஸ்ட் வழித்தடத்தில் ஏராள​மான தீவிர​வா​தி​கள் ஆயுதங்​களை கைவிட்டு பாது​காப்பு படைகளிடம் சரண் அடைந்து உள்​ளனர். நக்சல் தீவிர​வாதத்தை ஒழித்​தது போன்று நாடு முழு​வதும் போதைப் பொருள் பயன்​பாட்​டை​யும் ஒழிப்​போம். அடுத்த 3 ஆண்டு​களில், அதாவது வரும் 2029-ம் ஆண்​டில் போதை​யில்​லாத இந்​தியா உரு​வாகும்.

இதற்கு மத்​திய அரசு பல்​வேறு திட்​டங்​களை வகுத்து உள்​ளது. இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்​கள் சார்ந்த போதைப் பொருட்​கள் கடத்​தலில் 100 சர்​வ​தேச குழுக்​கள் ஈடு​பட்டு உள்​ளன. அந்த சட்​ட​விரோத குழுக்​கள் அனைத்​தும் ஒழிக்​கப்​படும்.

போதைப் பொருள் கடத்​தல் தொடர்​பான வழக்​கு​களில் தொடர்​புடைய 100 குற்​ற​வாளி​கள் வெளி​நாடு​களில் பதுங்கி உள்​ளனர். அவர்​கள் அனை​வரும் இந்​தி​யா​வுக்கு கொண்டு வரப்​பட்டு நீதி​யின் முன்பு நிறுத்​தப்​படு​வார்​கள். கடந்த 2014-ம் ஆண்​டுக்கு முன்​பாக போதைப் பொருள் கடத்​தலுக்கு எதி​ராக சிறிய அளவில் மட்​டுமே நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டன.

மத்​தி​யில் பாஜக அரசு பொறுப்​பேற்ற பிறகு போதைப் பொருள் கடத்​தலுக்கு எதி​ராக மிகப்​பெரிய நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. ஏஎன்​டிஎப் என்ற பெயரில் புதிய படைப்​பிரிவு உரு​வாக்​கப்​பட்டு உள்​ளது. இந்த படைப்​பிரிவு அனைத்து மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களி​லும் செயல்​படு​கிறது.

மேலும் தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு (என்​சிபி) வலுப்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. குறிப்​பாக இந்த அமைப்​பில் அதி​காரி​கள், அலு​வலர்​களின் எண்​ணிக்கை கணிச​மாக அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது. மத்​திய, மாநில பாது​காப்பு படைகளைச் சேர்ந்த 1,400-க்​கும் மேற்​பட்ட அதி​காரி​கள், சர்​வ​தேச போலீஸ் அமைப்​பான இன்​டர்​போலுடன் இணைந்து செயல்​பட்டு வரு​கின்​றனர்.

இதன் மூலம் போதைப்​பொருள் தடுப்பு நடவடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​படும். போதைப் பழக்​கத்​தில் சிக்​கித் தவிக்​கும் இளைஞர்களை மீட்க சிகிச்சை மற்​றும் ஆலோ​சனை​கள்​ வழங்கப்​பட்​டு வரு​கின்​றன. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்.

Spread the love