புதுடெல்லி: இந்தியா மற்றும் இத்தாலி இணைந்து அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி வர்த்தகத்தை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளன. இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற 23-வது இந்தியா-இத்தாலி கூட்டு ஆணையக் கூட்டத்தில், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இத்தாலி துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அந்தோனியோ தஜானி ஆகியோர் பங்கேற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் நான்காவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இத்தாலி உள்ளது. 2025-ம் ஆண்டில் ரூ.1.45 லட்சம் கோடியாக இருந்த இருதரப்பு வர்த்தகத்தை, 2029 க்குள் ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்த இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன. வருங்காலத்தில் இதனை ரூ.5 லட்சம் கோடி வரை உயர்த்தும் வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளிலும் உள்ள நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிர்வாக மற்றும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கவும், முதலீடுகளை எளிதாக்கவும் இந்தியா மற்றும் இத்தாலியில் பிரத்யேகப் பணிக்குழுக்களை அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு வழியாக ரயில் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து மூலம் இந்தியச் சந்தைகளை ஐரோப்பாவுடன் இணைக்கும் ‘இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடம்’ குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

More Stories
எஸ்சிஓ மன்ற நிகழ்வில் பங்கேற்க பாக். அமைச்சர் மாலிக் இந்தியா வருகை: 3 ஆண்டுகளில் முதல்முறை
11 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா விடுவிக்க உத்தரவிடக் கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
பிஹார்: நகைக்கடையில் துப்பாக்கி முனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை