ஆண்டிபட்டியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா.அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் கொண்டாட்டம். ஆண்டிபட்டி பிப்,25, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவை அ.தி.மு.கவினர் கூட்டணி கட்சியினருடன் அதி விமர்ச்சியாக கொண்டாடினர். ஆண்டிபட்டி வைகை பிரிவு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், பேரூர் செயலாளர் அருள்மதிகனேசன், அ.ம.மு.க நகர செயலாளர் வஜ்ரவேல், ரவி, பா.ஜ.க. மாவட்ட பொறுப்பாளர் குமார்,அ.தி.மு.க.வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை தலைவர் ரவி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்பு எம்.ஜி.ஆர். சிலைக்கு கீழே அமைக்கப்பட்ட ஜெயலலிதா உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகில் 4வது வார்டு கவுன்சிலர் பொன் முருகன் மலர்விழி சார்பில் ஜெயலலிதா உருவபடத்திற்கு மலர்தூவி வணங்கி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மரிக்குண்டு ஊராட்சி எரதி மக்காள் பட்டி ஜெ.ஜெ.கிரிக்கெட் கிளப் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டியை ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தொடங்கிவைத்தார்.எ. பட்டி கிளை செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

More Stories
தேர்தல் முன்னேற்பாடு பணி, கலெக்டர் ஆலோசனை கூட்டம்
பெரியகுளம் நகரில் ஜெயலலிதா பிறந்தநாள்
ஜல் ஜீவன் திட்டப்பணிகளில் முறைகேடு