பழநியில் தண்டாயுதபாணி சுவாமி கோயில் தங்கும் விடுதியில் 53 கோடி மதிப்பீட்டில் கந்தன் இல்லம் கடம்பன் இல்லம் மற்றும் இடும்பன் குடில் புதிய தங்கும் விடுதிகள் குடமுழுக்கு நினைவரங்கத்தில் வரிசை மண்டபம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை முதலமைச்சர் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.
பழனி முருகன் கோவில் சார்பில், ரூ 47. 1/2 கோடியில் தங்கும் விடுதிகள்.
காணொளி காட்சி மூலம் முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பழனி பிப்ரவரி 27
பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் உள்ள கட்டிடங்கள் மிகவும் பழமையானதால், இடித்து புதிதாக கட்டிடங்கள் கட்ட தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கந்தன் இல்லாம், கடம்பன் இல்லம், இடும்பன் குடில்கள் புதிதாக கட்ட ரூ 47 1/2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பழனி தண்டபாணி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, சென்னையிலிருந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பழனியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர். மேலும் கந்தன் இல்லத்தில் 23 அறைகளும், கடம்பன் இல்லத்தில் 58 அறைகளும், இடும்பன் குடியில் 109 அறைகளும், கட்டப்பட உள்ளது. அதேபோல் அடிவாரம் குடமுழக்கு நிலவரங்க வளாகத்தில் ரூ 5 1/2 கோடியில் வரிசை மண்டபம் கட்டப்பட உள்ளது.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்